செய்திகள் :

உ.பி.: சம்பலில் 45 ஆண்டுகளுக்குப்பின் திறக்கப்பட்ட கோயில்!

post image

உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் சிதிலமடைந்த நிலையில் காணப்பட்ட கோயிலொன்று இன்று(டிச. 14) திறக்கப்பட்டுள்ளது.

கடந்த 1978-ஆம் ஆண்டு மூடப்பட்ட இந்த சிவாலயம், சுமார் 45 ஆண்டுகளுக்குப்பின் இப்போது திறக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

பல ஆண்டுகளுக்குப்பின் கோயில் திறக்கப்பட்டிருப்பது குறித்து காவல்துறை உயரதிகாரியொருவர் கூறியதாவது, “கோயில் அமைந்திருக்கும் இந்த பகுதி சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, காவல்துறையால் இந்த பகுதியில் சோதனை நடத்தப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, சிதிலமடைந்த நிலையில் கோயிலிருப்பதை கண்டறிந்தோம்.

இதனையடுத்து கோயிலைத் திறந்து உள்ளே சென்று ஆய்வு செய்து வருகிறோம். கோயில் இருக்கும் இடத்திலுள்ள ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்ற நடவடடிக்கைகள் எடுக்கப்படும். கோயிலின் அருகமையிலுள்ள கிணறு ஒன்றும் பாழடைந்த நிலையில் உள்ளது. இந்த பகுதியில் புனரமைப்பு பணிகளுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.

முன்னதாக, கடந்த நவம்பர் மாதம் 24-ஆம் தேதியன்று சம்பல் பகுதியில் உள்ள 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஷாஹி ஜாமா மஸ்ஜித் மசூதியில் நீதிமன்றம் ஆய்வு நடத்த உத்தரவிட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

மசூதியில் ஆய்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்து மசூதி அருகே ஏராளமான போராட்டக்காரர்கள் திரண்டதால் அப்பகுதியில் வன்முறை மூண்டது. கல்வீச்சு சம்பவங்களும் அரங்கேறின. இதில் 4 பேர் உயிரிழந்தனர். பலர் காயமுற்றனர்.

இச்சம்பவம் குறித்து விசாரிக்க நீதிமன்றத்தால் விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. சம்பல் வன்முறை திட்டமிட்டு நடத்தப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஒரே நாடு; ஒரே தேர்தல் மசோதாக்கள்: மக்களவையில் திங்கள்கிழமை தாக்கல்

‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ மசோதா மக்களவையில் நாளை மறுநாள்(டிச. 16) தாக்கல் செய்யப்பட உள்ளது.’ஒரே நாடு; ஒரே தோ்தல் திட்டம்’ குறித்து ஆய்வு செய்வதற்காக முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையி... மேலும் பார்க்க

சாவர்க்கர் பேச்சு.. ராகுல் - ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே இடையே காரசார வாதம்

புது தில்லி: மக்களவையில் இன்று, அரசமைப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு நடைபெற்ற விவாதத்தில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், சிவசேனை எம்.பி. ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே இடையே... மேலும் பார்க்க

பெண் மருத்துவர் கொலை வழக்கு: சந்தீப் கோஷின் ஜாமீனைக் கண்டித்து காங்கிரஸ் பேரணி

பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வா் சந்தீப் கோஷின் ஜாமீனைக் கண்டித்து கொல்கத்தாவில் பல்வேறு இடங்களில் இடதுசாரிக் கட்சிகளும், காங்கிரஸும் சனிக்கிழமை கண்டனப் ப... மேலும் பார்க்க

பிரதம மந்திரி சுரக்‌ஷா பீமா காப்பீடு திட்டத்தில் 48 கோடி பேர் பதிவு! ஏன்?

பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா விபத்து காப்பீடு திட்டத்தில் இதுவரையில் 48 கோடி பேர் பதிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.பிரதம மந்திரி சுரக்‌ஷா பீமா (PMSBY) விபத்து காப்பீடு திட்டத... மேலும் பார்க்க

பேரிடர் காலங்களில் அரசியல் பாகுபாடு காட்டக்கூடாது: பிரியங்கா

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டு மக்களுக்கு நிவாரண உதவி வழங்குவதில் மத்திய அரசு பாகுபாடு காட்டக்கூடாது என்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி குற்றம் சாட்டினார். வயநாடு மக்களுக்கு நிவாரண நிதி உதவ... மேலும் பார்க்க

பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் பதற்றம்: விவசாயிகள் மீது தண்ணீரைப் பீய்ச்சியடித்து தடுத்து நிறுத்தம்!

தில்லிக்கு பேரணியாகச் சென்று தங்கள் கோரிக்கைகளை அரசுக்கு முன்வைக்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மீது காவல்துறையினர் தண்ணீர் பீய்ச்சியடித்து தடுத்து நிறுத்தியதால் பஞ்சாப் - ஹரியாணா மாநில எல்லைய... மேலும் பார்க்க