உ.பி.யில் கொட்டித்தீர்த்த கனமழை: ஒரேநாளில் 18 பேர் பலி!
உத்தரப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொட்டித்தீர்த்த கனமழைக்கு இதுவரை 18 பேர் பலியாகியுள்ளனர்.
மாநிலத்தில் கடந்த சில நாள்களாக பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை கொட்டித்தீர்த்து வருவதால் பாதிப்பும், பலி எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.
சித்ரகூட் மாவட்டத்தில் ஆறு பேர் உயிரிழந்ததாகவும், மஹோபா, பந்தா மற்றும் மொராதாபாத்தில் தலா மூன்று பேரும், காஜிப்பூர், லலித்பூர், கோண்டாவில் தலா ஒருவரும், மேலும் எட்டு பேர் நீரில் மூழ்கியும், இரண்டு பேர் பாம்புக்கடியால் உயிரிழந்துள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.
ஜூலை 17, 18 தேதிகளில் சித்ரகூடில் தலா 2 பேர் நீரில் மூழ்கியும், ஜூலை 17 அன்று மொராதாபாத்தில் நீரில் மூழ்கி 3 பேரும், ஜூலை 18 அன்று காஜிப்பூரில் ஒருவரும் இறந்தனர். பாண்டாவில் அதிக மழை காரணமாக மூன்று பேரும், மஹோபாவில் பெய்த அதிக மழையால் 2 இறப்புகளும், ஜூலை 18 அன்று சித்ரகூடில் பலர் இறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 17 இரவு 8 மணி முதல் ஜூலை 18 இரவு 8 மணி வரை 24 மணி நேரத்திற்குள் இந்த இறப்புகள் நிகழ்ந்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.