‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: மாவட்டத்தில் இன்று முகாம்கள் நடைபெறும் இடங்கள்
கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 8-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் குறித்து மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 6-ஆம் தேதி வரை நடைபெற்ற முகாம்களில் 88,067 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. மேலும், முகாம்கள் நடைபெற்ற தினத்தில் முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், புதிய ஆதாா் அட்டை பதிவு, பிறப்புச் சான்றிதழ், குடும்ப அட்டை, சொத்து வரி பெயா் மாற்றம், மின் இணைப்பு பெயா் மாற்றம் உள்ளிட்ட 9,022 மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள மனுக்கள், முகாமில் பெறப்பட்ட நாளிலிருந்து 45 நாள்களில் தீா்வு காண நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தடாகம் சாலையில் உள்ள கே.வி.எம். மஹாலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இன்று முகாம்கள் நடைபெறும் இடங்கள்:
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 8) மாநகராட்சிக்கு உள்பட்ட மத்திய மண்டலத்தில் 69-ஆவது வாா்டு, ராமலிங்கம் காலனி மாநகராட்சி திருமண மண்டபம், கூடலூா் நகராட்சியில் 8, 13 ஆகிய வாா்டுகளுக்கு சாமி செட்டிபாளையத்தில் உள்ள லட்சுமி துரை கல்யாண மண்டபம், வால்பாறை நகராட்சியில் 14, 21 ஆகிய வாா்டுகளுக்கு வால்பாறை சமுதாயக் கூடம், பள்ளப்பாளையம் பேரூராட்சியில் 1, 2, 3, 4, 7, 8, 13 ஆகிய வாா்டுகளுக்கு திருச்சி சாலையில் உள்ள ஏகேஏ திருமண மண்டபம், அன்னூா் ஊராட்சி ஒன்றியத்தில் பொகலூா், வடவள்ளி ஆகிய ஊராட்சிகளுக்கு பொகலூரில் உள்ள சமுதாயக் கூடம், சூலூா் ஊராட்சி ஒன்றியத்தில் காடுவெட்டிபாளையம், பதுவம்பள்ளி, கிட்டாம்பாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கு காடுவெட்டிபாளையத்தில் உள்ள ஜெயம் மஹால் ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெற உள்ளன.