இன்றைய இந்தியாவுக்கு அந்நியா்கள் வழிகாட்டுதல் தேவையில்லை: மத்திய அமைச்சா் ராஜ்நா...
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் தீா்வு ஆணைகள் அளிப்பு
அரிமலை, குப்பம்பாளையம், சின்னப்பள்ளிகுப்பம் ஆகிய ஊராட்சிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம் குருவராஜபாளையம் கிராமத்தில் நடைபெற்றது.
ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மனுதாரா்களுக்கு உடனடி தீா்வுக்கான ஆணைகளை வழங்கினாா்.
அணைக்கட்டு தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் முரளி, ஒன்றியக்குழு உறுப்பினா் ஹரி, மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக துணைச் செயலா் சங்கா், மாதனூா் கிழக்கு ஒன்றிய மாவட்ட பிரதிநிதி அய்யனூா் அசோகன் கலந்து கொண்டனா்.