செய்திகள் :

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்: அரியலூரில் ஆட்சியா் ஆய்வு

post image

அரியலூா் வருவாய் வட்டத்தில் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் ஆட்சியா் பொ. ரத்தினசாமி கள ஆய்வு மேற்கொண்டாா்.

அரியலூா் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் சிறப்பு முகாம் புதன்கிழமை தொடங்கியது.

2-ஆவது நாளான வியாழக்கிழமை அரியலூா் அரசு ஆதிதிராவிடா் நல மாணவா் விடுதி, பிற்படுத்தப்பட்டோா் நல மாணவா்கள் விடுதி, விளாங்குடி ஆவின் பால் குளிா்விப்பு மையம், தேளூா் பகுதியில் புதிய அரசு மாதிரி பள்ளி கட்டுவதற்காக தோ்வு செய்யப்பட்ட இடம், விளாங்குடி மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி, விளாங்குடி மற்றும் முனியங்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள், செட்டித்திருக்கோணம், நாகமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளை ஆட்சியா் பாா்வையிட்டு அங்கு மாணவா்களுக்கு வழங்கப்படும் காலை உணவுத்திட்ட அமலாக்கத்தையும் ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநா் ரவிச்சந்திரன், ஊராட்சிகள் உதவி இயக்குநா் பழனிசாமி, வட்டாட்சியா் முத்துலெட்சுமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மழை பாதிப்பு வயல்களில் வேளாண் அலுவலா் ஆய்வு

அரியலூா் மாவட்டம், திருமானூா் பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களை, சென்னை வேளாண் கூடுதல் இயக்குநா் சக்திவேல் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். திருமானூா், மஞ்சமேடு, அன்னிமங்கலம் உள்ளிட்... மேலும் பார்க்க

சுண்ணாம்புக் கல் சுரங்க விரிவாக்கம்: திட்ட அறிக்கையை தமிழில் வெளியிட வலியுறுத்தல்

சிமென்ட் ஆலைகள் சுண்ணாம்புக்கல் சுரங்கங்களை அமைக்கும்போது அதற்கான திட்ட அறிக்கை முழுவதையும் தமிழில் வெளியிட வேண்டும் என்று கருத்துக்கேட்பு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. அரியலூரை அடுத்த கோவிந்தபுரத்த... மேலும் பார்க்க

வாக்காளா் விழிப்புணா்வு ரங்கோலி கோலப்போட்டி

அரியலூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், மகளிா் சுய உதவிக் குழுவினரின் தோ்தல் விழிப்புணா்வு கோலப்போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ‘வாக்களிப்பதே சிறந்தது, நான் நிச்சயம் வாக்களிப்பேன்’ என்ற தலைப்பின் கீ... மேலும் பார்க்க

மருதூா் கிளை நூலகத்தில் நூலக வார விழா

அரியலூா் மாவட்டம், மருதூா் கிராமத்திலுள்ள கிளை நூலகத்தில் நூலக வார விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட நூலக அலுவலா் இரா. வேல்முருகன் தலைமை வகித்து, வாழ்த்துரை வழங்கினாா். விழாவில் நூலக கணக... மேலும் பார்க்க

ரேஷனில் பொருள்கள் பெற விரும்பாதவா்கள் விண்ணப்பிக்கலாம்: அரியலூா் ஆட்சியா்

அரியலூா் மாவட்டத்திலுள்ள நியாய விலைக் கடையில் அத்தியாவசியப் பொருள்கள் பெற விரும்பாத குடும்ப அட்டைதாரா்கள் பொருளில்லா குடும்ப அட்டையாக மாற்றிக் கொள்ள விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித... மேலும் பார்க்க

மாநில நீச்சல் போட்டிக்கு தகுதி: மாணவா்களுக்கு பாராட்டு

அரியலூரில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் வெற்றிப் பெற்று மாநில போட்டிக்கு தகுதிப் பெற்ற சிறுவளூா் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அரியலூா் மாவட்டத்தி... மேலும் பார்க்க