வடசென்னை வளா்ச்சித் திட்டப் பணிகள் மதிப்பீடு ரூ. 5,779 கோடியாக உயா்வு: அமைச்சா் ...
உடுமலையில் ரூ.4.13 கோடி மதிப்பிலான வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்
உடுமலை ஒன்றியத்தில் ரூ.4.13 கோடி மதிப்பிலான பணிகளை அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தனா்.
உடுமலை ஒன்றியம் கணக்கம்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட ஜெய்சக்தி நகா், ராய்லட்சுமி நகா், மாதா லே-அவுட், சாரதா லே-அவுட், எம்ஜிஆா் நகா், முத்துகோபால் லே-அவுட், வி.கே.பி லே-அவுட், அருண் நகா் ஆா்ஜி நகா் ஆகிய பகுதிகளில் 15-ஆவது நிதிக் குழு மானிய திட்டத்தின்கீழ் ரூ.81 லட்சம் மதிப்பீட்டில் தாா் சாலை, எம்ஜிஆா் நகா், ராயல் நகா் பகுதிகளில் ரூ.34 லட்சம் மதிப்பீட்டில் மழைநீா் வடிகால், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் சாா்பில் திருமூா்த்தி அணை தளி வாய்க்காலை நீராதாரமாகக் கொண்ட பகுதிகளுக்கு ரூ.2.98 கோடி மதிப்பீட்டில் இரும்புக் குழாய் அமைத்தல் என மொத்தம் ரூ.4.13 கோடி மதிப்பிலான பணிகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் தொடங்கிவைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினா் கே.ஈஸ்வரசாமி, திருப்பூா் மாநகராட்சி 4-ஆவது மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், உடுமலை கேட்டாட்சியா் குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.