செய்திகள் :

உணவு, குடிநீரின்றி 65,000க்கும் மேற்பட்டோர் தவிப்பு: ஐ.நா.

post image

காஸா: காஸாவின் வடக்கு பகுதியினுள் வெளியிலிருந்து நுழையும் மனிதாபிமான உதவிகள் அனைத்தும் இஸ்ரேல் ராணுவத்தினால் தடுக்கப்பட்டிருப்பதால் ஆயிரக்கணக்கான காஸா மக்கள் அத்தியாவசிய உதவிகளின்றி தவிப்பதாக ஐக்கிய நாடுகளின் சபை தெரிவித்துள்ளது.

கடந்த அக்டோபர் 6 முதல் இஸ்ரேல் ராணுவம் வடக்கு காஸாவில் தரைவழித் தாக்குதல் நடத்தி அப்பகுதிகளைக் கைப்பற்றிவருகிறது. இதனால் அப்பகுதிகளுக்குள் செல்லும் மனிதாபிமான உதவிகள் அனைத்தும் இஸ்ரேல் ராணுவத்தால் தடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கடந்த 66 நாட்களாக இஸ்ரேல் கைபற்றிய காஸாவின் வடக்கு பகுதிகளான பெயிட் லஹியா, பெயிட் ஹனொன் மற்றும் ஜபாலியா ஆகிய இடங்களில் வாழும் 65,000 முதல் 75,000 பாலஸ்தீனர்கள் உணவு, நீர், மின்சாரம் மற்றும் மருத்துவம் ஆகிய அடிப்படை உதவிகளின்றி தவித்து வருவதாகவும், 5,500க்கும் மேற்பட்டோர் பெயிட் லஹியாவிலிருந்து வலுக்கட்டாயமாக இடமாற்றப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவரங்களின் கூட்டமைப்பான ஒசிஎச்ஏ தெரிவித்துள்ளது.

மேலும் அங்கு நிலவும் உணவுப் பற்றாக்குறையைப் பற்றி அந்த கூட்டமைப்பு கூறுகையில் மொத்தமாக காஸாப்பகுதியில் ஐநாவைச் சார்ந்த வெறும் நான்கு உணவுக்கிடங்குகள் மட்டுமே தற்போது செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுப்பற்றி, காஸா நகரத்துக்கான ஐநாவின் மனிதாபிமான மற்றும் புனரமைப்பு ஒருங்கிணைப்பாளர் சிக்ரிட் காக் நேற்று (டிச.10) பத்திரிகையாளர்களிடம் ரகசியமாக கூறியதாவது:

காஸாவில் பொதுமக்கள் உயிர்வாழும் சுழல் முற்றிலும் அழிவுகரமானதாக உள்ளது.

சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது அங்கு நிலைமையை இன்னும் மோசமானதாக ஆக்கியுள்ளது. இதனால், ஐநா உள்பட பல உதவி நிறுவனங்கள் காஸா மக்களுக்குத் தேவையான உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்க முடியாத சூழலில் உள்ளதாக, அவர் கூறினார்.

மேலும், தான் உள்பட பல்வேறு ஐநா அதிகாரிகளும் வடக்கு காஸா பகுதிகளில் கான்வாய்கள் மற்றும் வணிகப்பொருட்களை அனுமதிக்கவும், தெற்கில் எகிப்து நாட்டிலிருந்து ரஃபா எல்லை மீண்டும் திறக்கவும் அதன் வழியாக இருமுறை பயன்படக்கூடிய பொருட்களை அனுமதிக்கவும் தொடர்ந்து பலமுறை இஸ்ரேலிடம் கேட்டுக்கொண்டிருப்பதாக சிக்ரிட் காக் கூறியுள்ளார்.

காக்கின் கருத்துக்களுக்கு தங்களிடம் எந்தவொரு பதிலும் இல்லை என்று இஸ்ரேலின் ஐ.நா தூதர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, இஸ்ரேலின் தாக்குதல்களினால் வாழ்வாதாரத்தை இழந்து வாடும் பாலஸ்தீனர்களுக்கு, தற்போது உணவு குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியங்களும் தடுக்கப்பட்டிருப்பது, அம்மக்களுக்கு இஸ்ரேலால் எற்பட்டுவரும் துயரத்தை இன்னமும் அதிகரித்துள்ளது.

கனமழையால் ஸ்தம்பித்த சென்னை! நெரிசலில் சிக்கிய வாகனங்கள்!

சென்னையில் பெய்த கனமழையால் போரூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நெரிசலில் வாகனங்கள் சிக்கியது.வங்கக்கடலில் உருவாக்கியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, சென்னை புறநகர்ப் பகுதிகளில... மேலும் பார்க்க

தீவிரமடையும் மழை... சென்னை நோக்கி வரும் மேகக்கூட்டங்கள்!

சென்னையில் இன்று காலை சில மணி நேரம் கனமழை பெய்த நிலையில், அடுத்த சுற்று மழை தொடங்கவுள்ளதாக தமிழ்நாடு வெதர்மென் பிரதீப் தெரிவித்துள்ளார்.நேற்று தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகு... மேலும் பார்க்க

மோசமான வானிலை: சென்னையில் 13 விமானங்கள் ரத்து

சென்னை: சென்னையில் புதன்கிழமை காலை முதல் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, 13 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்த... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 18 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இ... மேலும் பார்க்க

திருவண்ணாமலை தீபம்: சிறப்பு அனுமதி சீட்டு இல்லாமல் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்- அமைச்சர் சேகர்பாபு

திருவண்ணாமலை தீபத் திருவிழாவிற்கு சிறப்பு அனுமதி சீட்டு இல்லாமல் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்‌ எனவும்,பக்தர்கள் மலை மீது ஏற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அது குறித்து அறிவிப்பை மாவட்ட ஆட்சித்தலைவர் வ... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் விவசாயிகள் சாலை மறியல் - ஆட்சியரகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட நெல், கரும்பு பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம் முன்பு புதன்கிழமை விவசாயிகள் சாலை மறியல், ஆட்ச... மேலும் பார்க்க