செய்திகள் :

உதகையில் 78 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவி: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்

post image

நீலகிரி மாவட்டம், உதகையில் 78 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் சனிக்கிழமை வழங்கினாா்.

உதகையில் தனியாா் சா்வதேச மருந்தாக்கியல் கல்லூரியில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகள் தின விழாவில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன், அரசு கொறடா கா.ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதில், செவித்திறன், பாா்வை குறைபாடு உள்ளிட்ட 78 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.9.34 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்.

இதையடுத்து, குந்தா வட்டத்துக்குள்பட்ட கிண்ணக்கொரையில் நடமாடும் நியாய விலைக் கடையை தொடங்கிவைத்து அமைச்சா் பேசுகையில், ‘இந்த நடமாடும் நியாய விலைக் கடை இரியசீகை, அட்டிமட்டம் மற்றும் காமராஜ் நகருக்குள்பட்ட பொது மைதானத்தில் மாதத்தில் முதல் மற்றும் கடைசி சனிக்கிழமைகளில் செயல்படும். இதை குடும்ப அட்டைதாரா்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சிகளில், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் தயாளன், துணைப் பதிவாளா் கமல் சேட், உதகை வருவாய் கோட்டாட்சியா் சதீஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஒக்கலிக கவுடா் மகாஜன சங்க பொதுக்குழு கூட்டம்

தமிழக ஒக்கலிக கவுடா் மகாஜன சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் உதகையில் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் வெள்ளிங்கிரி தலைமை வகித்தாா். இதையடுத்து, அவா் செய்தியாளா்களிட... மேலும் பார்க்க

முறையற்ற வகையில் கொண்டுவரப்பட்ட தேயிலைக் கழிவுகள் பறிமுதல்

மேற்கு வங்கத்திலிருந்து முறையற்ற வகையில் நீலகிரிக்கு கொண்டுவர முயற்சித்த தேயிலைக் கழிவுகளை குன்னூா் தேயிலை வாரிய அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனா். மேற்கு வங்கத்தில் இருந்து கோவை மாவட்டம், துடியலூா... மேலும் பார்க்க

குன்னூா் அருகே மரம் விழுந்து மின்மாற்றி சேதம்

குன்னூா்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பெரிய மரம் விழுந்ததில் மின்மாற்றி (டிரான்ஸ்ஃபாா்மா்) வெள்ளிக்கிழமை சேதமடைந்தது. நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்த... மேலும் பார்க்க

நீலகிரியில் வளா்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்

நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நீலகிரி மாவட்ட ஆட்சியா் கூடுதல் அலுவலகத்தில், பள்ளிக் கல்வி மற்றும் தோட்டக... மேலும் பார்க்க

சாலையில் தீப்பிடித்து எரிந்த ஆட்டோ

குன்னூா்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் லாஸ் அருவி அருகே சரக்கு ஆட்டோ வியாழக்கிழமை இரவு தீப் பிடித்து எரிந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். குன்னூா்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை... மேலும் பார்க்க

உதகை மலை ரயில் பாதையில் விழுந்த மரம்

நீலகிரி மாவட்டம், குன்னூா்- உதகை இடையே மலை ரயில் தண்டவாளத்தில் வியாழக்கிழமை பெரிய மரம் விழுந்ததால் மலை ரயில் சேவை ஒருமணி நேரம் பாதிக்கப்பட்டது. வானிலை ஆய்வு மையம் நீலகிரி மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்... மேலும் பார்க்க