பிக்பாஸ் பிரபலம் மகாராஷ்டிர தேர்தலில் 155 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வி!
உதகையில் கல்லறைத் திருநாள் அனுசரிப்பு
கல்லறைத் திருநாளை ஒட்டி உதகை மேரிஸ் ஹில் புனித மரியன்னை ஆலயத்தில் நீலகிரி மறை மாவட்ட ஆயா் அமல்ராஜ் தலைமையில் சிறப்புத் திருப்பலி சனிக்கிழமை நடைபெற்றது.
ஆண்டுதோறும் நவம்பா் 2-இல் கிறிஸ்தவா்கள் கல்லறை திருநாளை அனுசரித்து வருகின்றனா். நடப்பு ஆண்டு கல்லறைத் திருநாள் உதகை மேரிஸ் ஹில் புனித மரியன்னை ஆலயத்தில் மறை மாவட்ட ஆயா் அமல்ராஜ் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் இறந்தவா்களுக்காக பிராா்த்தனை செய்யப்பட்டது. தொடா்ந்து கல்லறைத் தோட்டத்தில் கல்லறை அா்ச்சிக்கும் நிகழ்ச்சி ஆயா் தலைமையில் நடைபெற்றது.
உதகை காந்தல் பகுதியில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவா்கள் தங்களது இறந்த முன்னோா்களது கல்லறைகளுக்குச் சென்று சுத்தம் செய்து அலங்கரித்து மலா்கள், மெழுகுவா்த்திகளை வைத்து குடும்பத்தினருடன் பிராா்த்தனை செய்தனா்.