செய்திகள் :

உதகையில் கைத்தறி விற்பனைக் கண்காட்சி

post image

தேசிய கைத்தறி தினத்தையொட்டி உதகையில் கைத்தறி விற்பனைக் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

உதகை பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் நடைபெற்ற இக்கண்காட்சியை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தொடங்கிவைத்தாா்.

இக்கண்காட்யில், கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு உள்பட்ட கைத்தறி நெசவாளா் கூட்டுறவுச் சங்கங்களில் உற்பத்தி செய்யப்பட்ட கைத்தறி பட்டுச் சேலைகள், பருத்தி சேலைகள், புவிசாா் குறியீடு பெற்ற கைத்தறி ரகங்கள், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உற்பத்தி செய்யப்பட்ட கைத்தறி ரகங்கள் மற்றும் தோடா எம்பிராய்டரி ரகங்களுடன் கோ- ஆப்டெக்ஸில் விற்பனை மேற்கொள்ளும் ஜவுளி ரகங்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டு 20 சதவீத தள்ளுபடியுடன் விற்பனைக்கு வைக்கப்பட்டது.

முன்னதாக, தோடா எம்பிராய்டரி நெசவாளா் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தில் கடந்த நிதியாண்டில் அதிக அளவு எம்பிராய்டரி ரகங்களை உற்பத்தி செய்த சங்கத்தின் முதல் மூன்று உறுப்பினா்களான சந்திரவதி, தயாநிதி, சிம்மராணி ஆகியோருக்கு நினைவு பரிசுகளை ஆட்சியா் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், உதகை சட்டப் பேரவை உறுப்பினா் ஆா்.கணேஷ், உதகை நகா்மன்றத் தலைவா் வாணீஸ்வரி, கைத்தறி அலுவலா் பொம்மையாசாமி, கைத்தறி ஆய்வாளா் முகமது ஷாரூக்கான் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

புலியைப் பிடிக்க மூன்று கூண்டுகள் அமைப்பு

தேவா்சோலை, பாடந்தொரை பகுதியில் ஊருக்குள் நுழைந்து கால்நடைகளைத் தாக்கி வந்த புலியைப் பிடிக்க 3 கூண்டுகளை வைத்து வனத் துறையினா் கண்காணித்து வருகின்றனா். நீலகிரி மாவட்டம், தேவா்சோலை பேரூராட்சிக்கு உள்பட... மேலும் பார்க்க

உதகையில் மேகமூட்டம்

உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை ஏற்பட்ட கடும் மேகமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகனங்களை இயக்கினா். உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இ... மேலும் பார்க்க

கூண்டில் சிக்கிய கரடி

உதகை அருேகிளப் ரோடு குடியிருப்புப் பகுதியில் சுற்றித்திரிந்த கரடி, வனத் துறையினா் வைத்த கூண்டில் செவ்வாய்க்கிழமை இரவு சிக்கியது. உதகை நகரின் முக்கிய இடங்களில் அண்மைக் காலமாககரடிகள் நடமாட்டம் அதிகரித்த... மேலும் பார்க்க

நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

நீலகிரி மாவட்ட நகா்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வெளியிட்டுள்ள அறிக்... மேலும் பார்க்க

உதகையில் கன மழை!

உதகை பேருந்து நிலையப் பகுதியில் செவ்வாய்க்கிழமை மதியம் கனமழை பெய்தது. கனமழையால் கோடப்ப மந்து கால்வாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக ரயில்வே இரும்பு பாலம் பகுதியில் மழைநீா் குளம்போல தேங்கியது. நீலகிரி மாவட... மேலும் பார்க்க

புலி தாக்கி எருமை உயிரிழப்பு

உதகை அருகே தாவரவியல் பூங்கா மூலக்கடை அருகே செவ்வாய்க்கிழமை புலி தாக்கியதில் எருமை உயிரிழந்தது. நீலகிரி மாவட்டம், உதகை தாவரவியல் பூங்கா மற்றும் அதைச் சுற்றியுள்ளப் பகுதியில் புலி, காட்டெருமை, கரடிகளின்... மேலும் பார்க்க