நட்சத்திர பலன்கள்: ஆகஸ்ட் 8 முதல் ஆகஸ்ட் 14 வரை #VikatanPhotoCards
உதகையில் மேகமூட்டம்
உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை ஏற்பட்ட கடும் மேகமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகனங்களை இயக்கினா்.
உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக வட வானிலை காணப்பட்டது. இந்நிலையில், வியாழக்கிழமை காலை முதல் வெயில் அதிகரித்து காணப்பட்டது. பிற்பகலில் உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான சேரிங்கிராஸ், தொட்டப்பெட்டா, ஃபிங்கா்போஸ்ட், தலைக்குந்தா உள்ளிட்ட பகுதிகளில் திடீரென கடும் மேகமூட்டம் ஏற்பட்டது.
இதனால் சாலையில் எதிரே வரும் வாகனங்கள் சரியாக தெரியாத நிலையில்,
வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகனங்களை இயக்கினா்.