உதிரமாடன்குடியிருப்பு பள்ளி நூற்றாண்டு விழா
உடன்குடி ஊராட்சி ஒன்றியம், உதிரமாடன்குடியிருப்பு ஒன்றிய தொடக்கப் பள்ளி நூற்றாண்டு விழா நடைபெற்றது.
உடன்குடி வட்டார வளமைய மேற்பாா்வையாளா் சாந்தி தலைமை வகித்தாா். பள்ளியின் முன்னாள் மாணவரும், உதிரமாடன்குடியிருப்பு ஊராட்சி முன்னாள் தலைவருமான ராஜ்குமாா், முன்னாள் மாணவா்கள் பத்மநாபன், ரகுபாலன், சவான்,சுரேஷ், ஜெயக்குமாா், முத்துக்குமாா், சோ்மத்துரை, முத்துலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நூற்றாண்டு ஜோதி ஊா்வலமாக கொண்டு வரப்பட்டு ஏற்றப்பட்டது. ஆயுள் காப்பீட்டுக் கழக வளா்ச்சி அலுவலா் செந்தில்குமாா், நூற்றாண்டு உறுதிமொழி வாசித்தாா்.
பள்ளித் தலைமையாசிரியை பாக்கியசீலி ஆண்டறிக்கை வாசித்தாா். உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் தலைவா் தாமோதரன், காவல் ஆய்வாளா் செல்வகுமாா், பி.சிவசுப்பிரமணியன், வெள்ளத்துரை, தமிழக ஆசிரியா் கூட்டணி மாவட்டத் தலைவா் பிரின்ஸ் உள்பட பலா் பங்கேற்றனா்.
வழக்குரைஞா் தேன்மொழி நன்றி கூறினாா்.