அதிமுக & அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் கிறிஸ்துமஸ் விழா! - அருகருகே ...
உத்தரகண்டில் பெரும் நிலச்சரிவு!
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள தார்ச்சுலா-தவாகாட்-லிபுலேக் சாலையில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது.
பித்தோராகரில் உள்ள தவாகாட் அருகே காலை 11 மணியளவில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டதாக மாவட்ட நீதிபதி வினோத் கோஸ்வாமி தெரிவித்தார்.
இந்த நிலச்சரிவு சம்பவத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. நிலச்சரிவு காரணமாக சாலை மூடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
எஸ்டிஎம் தர்ச்சுலா மற்றும் பிஆர்ஓ அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, இந்தியா-சீனா எல்லையில் உள்ள லிபுலேக்கிற்குச் செல்லும் சாலையைத் திறக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பாதை விரைவில் திறக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
பிரதான சாலைக்கு மேலே கட்டுமானத்தில் உள்ள மற்றொரு சாலையில் இருந்து கற்கள் சரியத் தொடங்கியபோது நிலச்சரிவு ஏற்பட்டிருக்கலாம் என்று கோஸ்வாமி கூறினார்.