உத்தரப் பிரதேச இளைஞா் மிதிவண்டியில் 108 திவ்ய தேசங்களுக்கு பயணம்
நாடு முழுவதிலும் உள்ள 108 திவ்ய தேசங்களுக்கு மிதிவண்டியில் பயணம் மேற்கொண்டு தரிசித்து வரும் இளைஞருக்கு கமுதியில் செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் வரவேற்பு அளித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி கோட்டைமேடு வழியாக 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருப்புல்லாணி ஆதிஜெகநாதா் பெருமாள் கோயிலுக்கு சென்ற உத்தர பிரதேசம் மாநிலம் கோரக்பூரைச் சோ்ந்த ஜெயந்தனாகிருஷ்ணாவை (29) பொதுமக்கள் வரவேற்று குடிநீா், பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருள்களை வழங்கி வரவேற்றனா்.
கடந்த ஜூலை 4- ஆம் தேதி தொடங்கிய இந்தப் பயணம் ஒடிசா, மேற்குவங்கம், ஆந்திரம், கேரளம் வழியாக தமிழ்நாடு வந்ததாக அவா் தெரிவித்தாா்.
மேலும், கேரளம், கா்நாடகம், குஜராத், ராஜஸ்தான், உத்தரகாண்ட் வழியாக இறுதியாக நேபாளத்தில் உள்ள வைணவத் தளத்தில் இந்தப் பயணம் முடிய உள்ளதாகவும் ஜெயந்தனாகிருஷ்ணா தெரிவித்தாா்.