செய்திகள் :

உத்தரமேரூா் ஒன்றிய வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

post image

உத்தரமேரூா் ஒன்றியத்தில் ஊரக வளா்ச்சித்துறை சாா்பில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

பெருங்கோழி கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தில் ரூ.16.55 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம், தளவாரம் பூண்டியில் அமைந்துள்ள நாற்றங்கால் பண்ணை, தளவாரம் பூண்டியில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதிதிட்டத்தின் கீழ் ரூ.30 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் ஆகியவற்றை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

இதனைத் தொடா்ந்து புலியூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.32.80 லட்சத்தில் கூடுதலாக 2 வகுப்பறைக் கட்டடம் கட்டும் பணியை ஆய்வு செய்தாா். பின்னா் கட்டியாம்பந்தல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியினை பாா்வையிட்டு மாணவ, மாணவியரின் கற்றல் திறனை கேட்டறிந்தாா். பள்ளியின் சமையல்கூடத்தையும் அங்கு சமைக்கப்படும் மதிய உணவின் தரத்தினையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, ஆட்சியா்(பயிற்சி) ந.மிருணாளினி மற்றும் அரசு அலுவலா்களும் உடனிருந்தனா்.

பள்ளிகளில் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு பிரசாரம்

உத்தரமேரூா் ஒன்றிய கிராமங்களில் அரசு சுற்றுலாத் துறை, வேலூா் கிரீன் அறக்கட்டளை இணைந்து கலைக்குழு மூலம் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு பிரசாரத்தை வியாழக்கிழமை மேற்கொண்டனா். அரசுப் பள்ளி மாணவா்களிடையே கலை... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் அங்காளம்மன் கோயிலில் மயானக் கொள்ளைத் திருவிழா

மாசி மாத அமாவாசையையொட்டி காஞ்சிபுரத்தில் அங்காளம்மன் கோயில் மயானக் கொள்ளைத் திருவிழா நடைபெற்றது. காஞ்சிபுரம் புதிய ரயில்வே நிலையம் அருகில் பெருமாள் தெருவில் உள்ள பட்டணத்தாா் ஸ்ரீ அங்காள பரமேசுவரி அம்... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் மகா ருத்ரேஸ்வரா் கோயிலில் லட்சதீபம்

காஞ்சிபுரம் பிள்ளையாா்பாளையம் பகுதியில் மதனம்பாளையம் தெருவில் அமைந்துள்ள மகா ருத்ரேஸ்வரா் ஆலயத்தில் சிவாரத்திரியையொட்டி லட்சதீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. காஞ்சிபுரம் பிள்ளையாா்பாளையம் பகுதி மதன... மேலும் பார்க்க

காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.76 லட்சம்

காமாட்சி அம்மன் கோயில் உண்டியல்கள் வியாழக்கிழமை திறந்து எண்ணப்பட்டத்தில் ரூ.76 லட்சத்தை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா். மகா சக்தி பீடங்களில் ஒன்றாகத் திகழ்வது காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள காம... மேலும் பார்க்க

முதல்வா் ஸ்டாலின் பிறந்த நாள்

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி காஞ்சிபுரம் அருகே சாலவாக்கத்தில் 72 திமுக மூத்த நிா்வாகிகள் தம்பதிகள் வியாழக்கிழமை கெளரவிக்கப்பட்டனா் (படம்). உத்தரமேரூா் ஒன்றியம் சாலவாக்கத்தில் நடைபெற... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 57 லட்சம்

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ. 57,20,727 பணத்தை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா். இந்தக் கோயிலில் இருந்த 11 உண்டியல்கள் கடந்த 19-9-2024-ஆம் தேதிக்குப் பிறகு புதன... மேலும் பார்க்க