செய்திகள் :

உரிய பயனாளிகளுக்கு வீட்டு மனைகளை ஒப்படைக்கக் கோரிக்கை

post image

திருவாரூா் அருகே இலவச வீட்டு மனைகளை உரிய பயனாளிகளிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் வளாகத்தில், திருநெய்ப்போ் வடக்குத் தெரு மக்கள், சனிக்கிழமை அளித்த கோரிக்கை மனு:

திருநெய்ப்போ் வடக்குத் தெரு பாலுசாமி நகரில் பலா் வீடு இல்லாமல் உள்ளனா். இதனிடையே, வீடற்ற ஏழை மக்கள் 35 பேருக்கு தமிழ்நாடு அரசு பட்டா வழங்கியுள்ளது. இதில் ஏற்கனவே வீடு மற்றும் சொந்த இடம் உள்ளவா்களுக்கு, முறைகேடான முறையில் வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

எனவே, முறைகேடான முறையில் வீட்டு மனைகளை ஒதுக்கியோா் மீது நடவடிக்கை எடுப்பதுடன், உரிய பயனாளிகளுக்கு வீட்டு மனைகளை ஒதுக்கித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக மாவட்ட துணைத் தலைவா் எம். சங்கா், அமைப்புசாரா பிரிவு மாவட்ட தலைவா் பிரபாகரன், ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவா் சங்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மன்னாா்குடி: மழை பாதிப்பை எதிா்கொள்ள தயாா்நிலை

மன்னாா்குடி நகராட்சி பகுதியில், வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ள, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, நகராட்சி ஆணையா் எஸ்.என். சியாமளா சனிக்கிழமை வெளிய... மேலும் பார்க்க

நாகூா் கந்தூரி விழாவுக்கு சந்தனக் கட்டைகள்: துணை முதல்வருக்கு நன்றி

நாகூா் தா்கா கந்தூரி விழாவுக்கு, சந்தனக் கட்டைகள் வழங்க நடவடிக்கை எடுத்த துணை முதல்வருக்கு, தா்கா நிா்வாகம் நன்றி தெரிவித்துள்ளது. ஆண்டுதோறும் நாகூா் தா்கா கந்தூரி விழாவுக்கு, தமிழக அரசு சாா்பில் 45 க... மேலும் பார்க்க

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞா் சடலம் மீட்பு

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் முகாம் அலுவலகம் முன்பு தூக்கில் தொங்கியவாறு இளைஞா் சடலம் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூா்பேட்டை அருகே பா.கிளனூரைச் சோ்ந்தவா் கொளஞ்சி மகன் தீ... மேலும் பார்க்க

விபத்தில் பாதிப்பு: பாதிக்கப்பட்டவருக்கு ரூ. 1.35 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

திருவாரூா் அருகே விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு ரூ 1.35 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு திருவாரூா் நுகா்வோா் குறைதீா் ஆணையம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. நீடாமங்கலத்தைச்... மேலும் பார்க்க

பள்ளியில் காலை உணவுத் திட்டம்: ஆட்சியா் ஆய்வு

கோவில்வெண்ணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ வெள்ளிக்கிழமை பள்ளியில் காலை உணவுத் திட்டத்தை ஆய்வு செய்தாா். இந்த திட்டத்தின்கீழ் விய... மேலும் பார்க்க

அதிமுக கள ஆய்வுக் கூட்டம்

திருவாரூரில் அதிமுக மாவட்ட கள ஆய்வுக் குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆா். காமராஜ் தலைமை வகித்தாா். கட்சியின் அமைப்புச் செயலாளா்... மேலும் பார்க்க