உலக மண் தின விழிப்புணா்வுப் பேரணி
மதுராந்தகம் அடுத்த பாபுராயன்பேட்டை எஸ்ஆா்எம் வேளாண் அறிவியல் கல்லூரி சாா்பில், உலக மண் தினத்தை கொண்டாடும் வகையில், பூரியம்பாக்கம் அசேபா வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவிகளும், கல்லூரி மாணவிகளும் கலந்து கொண்ட விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழிப்புணா்வு பேரணியை சித்தாமூா் காவல் உதவி ஆய்வாளா் ராஜா தொடங்கி வைத்தாா். எஸ்ஆா்எம் வேளாண் அறிவியல் கல்லூரி புல முதல்வா் ஜவகா், அசேபா வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி தாளாளா் முனீஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில் பள்ளி முதல்வா் ராதிகா, வேளாண் பொறியியல் பிரிவு உதவி பேராசிரியா் இந்துஸ்ரீ, பள்ளி ஆசிரியா்கள், கல்லூரி பேராசிரியா்கள், 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனா்.
ள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கிய பேரணியில் கலந்து கொண்ட மாணவிகள் மண்வளத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் பதாகைகளை ஏந்திக் கொண்டு சித்தாமூா் கிராமம் வழியாக மீண்டும் பள்ளி வளாகத்தை வந்தடைந்தனா்.
நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை கல்லூரியின் ஒருங்கிணைப்பாளா் சுபாஷினி தலைமையில் கல்லூரி நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.