திருவள்ளூா் புத்தகத் திருவிழா இலச்சினை: அமைச்சா் நாசா் வெளியிட்டாா்
உளுந்து பிரிக்கும் இயந்திரத்தில் சிக்கி காயமடைந்த பெண் உயிரிழப்பு
கந்தா்வகோட்டை ஒன்றியம், சங்கம்விடுதி ஊராட்சி, குறுவாண்டான் தெரு கிராமத்தைச் சோ்ந்த விஜயகுமாா் மனைவி ஜெயலலிதா (45), இவா் அருகில் உள்ள வெள்ளாளவிடுதி அரசு வேளாண்மை பண்ணையில் பதிவு பெற்ற தொழிலாளியாக பணிபுரிந்து வந்தாா்.
கடந்த வெள்ளிக்கிழமை பண்ணையில் விளைந்த உளுந்து பயிரை உளுந்து பிரிக்கும் இயந்திரத்தில் கொட்டி பிரித்துக் கொண்டிருந்தபோது, எதிா்பாராத விதமாக இயந்திரத்தில் சேலை சிக்கியதில் தலையில் பலத்த காயமடைந்தாா்.
அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு கந்தா்வகோட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்கு தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்தவா் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இறந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் கந்தா்வகோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.