செய்திகள் :

உள்நாட்டில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்! 2 பெண்கள் உள்பட 3 பேர் பலி!

post image

பாகிஸ்தானின், பலூசிஸ்தான் மாகாணத்தில் அரசுப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 2 பெண்கள் உள்பட 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

பலூசிஸ்தானின், குஸ்தார் மாவட்டத்தின் ஸெஹ்ரி பகுதியில் குடியிருப்பு வீடுகளைக் குறிவைத்து, நேற்று (செப்.17) நள்ளிரவு பாகிஸ்தானின் போர் விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் வான்வழித் தாக்குதல்கள் நடத்தியதாக, பலூச் மனித உரிமை அமைப்புகள் கூறியுள்ளன.

இந்தத் தாக்குதல்களில், 2 பெண்கள் உள்பட 3 பேர் கொல்லப்பட்ட நிலையில், 4 வயது குழந்தை உள்பட 5 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மக்கள் வசிக்கும் பகுதிகளின் மீது போர் விமானங்கள் மற்றும் ராணுவ ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்துவது சர்வதேச மனிதாபிமான விதிகளை மீறும் செயல் எனக் கூறி பல்வேறு அமைப்புகள் பாகிஸ்தான் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

மேலும், கடந்த 2 மாதங்களில் மட்டும் ஸெஹ்ரி பகுதியில், பாகிஸ்தான் அரசுப் படைகள் 3 முறை வான்வழித் தாக்குதல்கள் நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

பாகிஸ்தானின் வளம்நிறைந்த மாகாணமான பலூசிஸ்தானில் வசிக்கும் பலூச் இனமக்கள், பல ஆண்டுகளாக பாகிஸ்தான் அரசின் வன்முறைகளுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். அவ்வப்போது, அரசுப் படைகளினால் பலூச் மக்கள் கடத்தப்பட்டு வலுக்கட்டாயமாக மாயமாக்கப்படும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

இதனால், நீண்டகாலமாகவே பலூசிஸ்தானை தனிநாடாக உருவாக்கவேண்டும் என பலூச் போராளிகள் பாகிஸ்தான் அரசுக்கு எதிராகத் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பிரிட்டனின் அரச நெறிமுறைகளை மீறினாரா அதிபர் டிரம்ப்?

Three people, including two women, have been killed in an airstrike by government forces in Pakistan's Balochistan province, it has been reported.

ராணுவ முகாமில் இருந்து வெளியேறினார் நேபாள முன்னாள் பிரதமர்!

நேபாளத்தில், பதவி விலகிய முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஓலி ராணுவ முகாமில் இருந்து வெளியேறி தனியார் வீட்டில் குடியேறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேபாள நாட்டில், சமூக ஊடகங்கள் மீதான தடை மற்றும் ஆட்சிய... மேலும் பார்க்க

பிரிட்டனின் அரச நெறிமுறைகளை மீறினாரா அதிபர் டிரம்ப்?

பிரிட்டன் நாட்டுக்கு, அரசு முறைப் பயணமாகச் சென்றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரிட்டனின் அரச நெறிமுறைகளை மீறியதாக, இணையவாசிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்... மேலும் பார்க்க

பாலிவுட்டில் நடிக்க ஹாலிவுட் நடிகை சிட்னி ஸ்வீனிக்கு ரூ. 530 கோடி சம்பளமா?

ஹாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகை சிட்னி ஸ்வீனியை, தற்போது பாலிவுட்டிலும் நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.2009-ல் ஹாலிவுட்டில் ஹீரோஸ் என்ற தொலைக்காட்சித் தொட... மேலும் பார்க்க

ஆப்கனில் இணைய சேவையைத் துண்டித்த தலிபான் அரசு!

ஆப்கானிஸ்தான் நாட்டில், சுமார் 6 மாகாணங்களில் ஃபைபர் ஆப்டிக் இணைய சேவைக்கு, தலிபான் அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில், ஒழுக்கக் கேட்டைத் தவிர்க்கும் முயற்சி எனக் கூறி, ஃபைபர் ஆப்டிக்... மேலும் பார்க்க

காஸா மக்களை வெளியேற்ற இஸ்ரேல் தீவிரம்! மிகவும் மோசமான நிலையில் குழந்தைகள்!!

வடக்கு காஸாவில் உள்ள மக்களை வெளியேற்ற இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது. பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேல் படையினருக்கும் இடையே கடந்த 2023 அக்டோபர் மாதம் தொடங்கிய போர்... மேலும் பார்க்க

சிந்தூர்: பயங்கரவாதிகள் இறுதிச் சடங்கில் அதிகாரிகள் பங்கேற்க உத்தரவிட்டது பாக். ராணுவ தளபதி

இந்தியா நடத்திய சிந்தூர் தாக்குதலில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கில் பங்கேற்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதே பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனிர்தான் என்று ஜெய்ஷ்-ஏ-முகமது தலைவர் இலியாஸ் கஷ்ம... மேலும் பார்க்க