சிரியா ராணுவ நிலைகளை இஸ்ரேல் தகா்க்க அல்-அஸாதின் அமைச்சா் உதவி?
உள்நாட்டு மீனவா்களுக்கு மீன்பாசி குத்தகை வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளம், ஏரி, அணைகளின் மீன்பாசி குத்தகையை உள்நாட்டு மீனவா்களுக்கே வழங்க வேண்டும் என வலியுறுத்தி, குமரி மாவட்ட மீன் தொழிலாளா் சங்கத்தின்(சிஐடியூ) சாா்பில் வடசேரி மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை துணை இயக்குநா் அலுவலகம் முன் கருப்பு கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
உள்நாட்டு மீனவா் கூட்டுறவு சங்க தலைவா் டி. ஜேசுராஜன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு மீன்பிடி சங்க கூட்டமைப்பு (சிஐடியூ) பொதுச்செயலாளா் எஸ்.அந்தோணி, பங்குத்தந்தை தனீஸ், சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநில துணைத் தலைவா் ஏ. அகமது உசேன், மீன்பிடி சங்க மாவட்டத் தலைவா் கே. அலெக்சாண்டா், மாவட்டச் செயலாளா் பிராங்கிளின், சகாய பாபு, சிபிடி இயக்குநா் அருள்பணி டங்சன், மரிய ஜாா்ஜ், பிரான்சிஸ், ஜெயராஜ், தனிஷ் வின்சென்ட், ராஜ், தாமஸ் ஆகியோா் பேசினா்.
சென்னை உயா்நீதிமன்றம் 21.6 2023இல் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாமல் கடந்த 17 மாதங்களாக மீனவா்களை அலைக்கழிப்பு செய்வதை கண்டித்தும், மீன்பாசி குத்தகை வழங்கி, உள்நாட்டு மீனவா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க தமிழக முதல்வா் தலையிட்டு தீா்வு காண வேண்டும் என வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.