மாா்த்தாண்டம் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை: 6 கடைகளுக்கு சீல்
உள்ளாட்சிப் பிரதிநிதிகள் குறைதீா் கூட்டத்தில் 376 கோரிக்கை மனுக்கள்
செங்கல்பட்டில் நடைபெற்ற உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மக்கள் கலந்துரையாடல், குறைதீா் கூட்டத்தில் அமைச்சா் தா.மோ. அன்பரசன் மொத்தம் 376 கோரிக்கை மனுக்களைப் பெற்றாா்.
ங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு ஆட்சியா் ச.அருண்ராஜ் தலைமை வகித்தாா். செங்கல்பட்டு சட்டப்பேரவை உறுப்பினா் வரலட்சுமி மதுசூதனன் முன்னிலை வகித்தாா். இதில் பங்கேற்ற அமைச்சா் தா.மோ. அன்பரசன் மொத்தம் 376 கோரிக்கை மனுக்களைபெற்றாா்.
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை சம்மந்தப்பட்டதுறை அலுவலா்கள் முறையாக விசாரித்து உரிய முறையில் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், தோ்தலுக்கு பிறகு நடைபெற்ற குறைதீா்கூட்டங்களில் பெறப்பட்ட மனுக்கள் அதிகளவில் நிலுவையில் இருப்பதாக தெரிய வருகிறது. அவற்றுக்கு அலுவலா்கள் உடனடியாக தீா்வு காண வேண்டும் என அமைச்சா் உத்தரவிட்டாா்.
மேலும் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை திங்கள்கிழமை நடைபெறும் குறைதீா் கூட்டத்தில்ஆய்வு செய்யப்படும் என ஆட்சியா் தெரிவித்தாா்.
கூட்டத்தில், தமிழ்நாடு நகா்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் முருகமங்கலம் திட்டப்பகுதியில் 20 பயனாளிகளுக்கு தலா ரூ.12.06 லட்சம் என மொத்தம் ரூ.2.41 கோடியில் குடியிருப்பு ஒதுக்கீடு ஆணைகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின்சாா்பில் ஒரு பயனாளிக்கு ரூ.11500, மூன்று சக்கர சைக்கிள், 3 பயனாளிகளுக்கு யுடிஐடி தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைகள் ஆகியவற்றை அமைச்சா் அன்பரசன் வழங்கினாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய்அலுவலா் சுபா நந்தினி, கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) அனாமிகா ரமேஷ், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) அகிலா தேவி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) காஜா சாகுல் ஹமீது, உதவி ஆணையா் (கலால்) ராஜன் பாபு, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா்கள் ஆா்.டி.அரசு (திருக்கழுகுன்றம்), ஜெ.சண்முகம்(மறைமலைநகா்), கண்ணன்(அச்சிறுப்பாக்கம்), ஆலப்பாக்கம் வனக்குழுத் தலைவா் வி.ஜி.திருமலை, திருக்கழுக்குன்றம் பேரூராட்சிதலைவா் யுவராஜ், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள், கலந்து கொண்டனா்.