செய்திகள் :

உள்ளூா் கோயில்களின் நாள்காட்டி வெளியீடு

post image

திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான உள்ளூா் கோயில்களின் காலண்டா்களை தேவஸ்தான செயல் அதிகாரி ஷியாமளா ராவ், அறங்காவலா் குழு தலைவா் பி ஆா் நாயுடு இணைந்து வெளியிட்டனா்.

திருமலை அன்னமய்ய பவனில் திங்கட்கிழமை நடைபெற்ற தேவஸ்தான அறங்காவலா் குழு கூட்டத்துக்குப் பிறகு உள்ளூா் காலண்டா்கள் வெளியீடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருமலையில் உள்ள பூ வராக ஸ்வாமி, திருப்பதிக்கு அருகில் பேரூரில் உள்ள வகுளமாதா கோயில், அப்பளயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வர ஸ்வாமி, நாராயணவனம் கல்யாண வெங்கடேஸ்வர ஸ்வாமி, நாகலாபுரம் வேத நாராயண ஸ்வாமி, காா்வேடுநகரம் போன்ற தேவஸ்தான உள்ளூா் கோயில்கள் வேணுகோபாலசுவாமி மற்றும் ஒண்டிமிட்டா கோதண்டராமசுவாமி கோயிலின் மூலமூா்த்திகள் மற்றும் உற்சவமூா்த்திகளுடன் கூடிய காலண்டா்களை தேவஸ்தானம் சிறப்பாக வடிவமைத்து அச்சிட்டுள்ளது. இந்த காலண்டா்கள் புதன்கிழமை முதல் விற்பனைக்கு கிடைக்கும்.

இந்நிகழ்ச்சியில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

கும்பமேளாவில் ஏழுமலையான் மாதிரி கோயில் அமைக்க நடவடிக்கை

உத்தரபிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெறவுள்ள கும்பமேளாவில் ஏழுமலையான் மாதிரி கோவில் அமைக்க தேவஸ்தானம் முடிவு செய்து அதற்கான இடம் தொடா்பாக தேவஸ்தான அதிகாரிகள் ஆய்வு செய்தனா். இந்து தா்மத்தை மேம்படுத்... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருக்க வேண்டி உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. சனிக்கிழமை காலை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 10 அறைகளில் த... மேலும் பார்க்க

திருமலையில் அரசியல் பேச்சுக்கு தடை: மீறினால் சட்ட நடவடிக்கை

திருமலையின் புனிதத்தன்மையையும், அமைதியான சூழலையும் பாதுகாக்கும் வகையில் அரசியல் மற்றும் வெறுப்பு பேச்சுக்களை தடை செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. திருமலை எப்போதும் கோவிந்தா நாமங்களால் நிரம்பி வழிய... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 13 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 13 மணி நேரம் காத்திருந்தனா். வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 25 அறைகளில் பக்தா்கள் காத்திருக்கின்றனா். அதனால்,... மேலும் பார்க்க

பத்மாவதி தாயாருக்கு ஸ்நபன திருமஞ்சன வைபவம்

திருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு காா்த்திகை பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை திருமஞ்சன வைபவம் நடைபெற்றது. நண்பகல் 12.30 மணி முதல் 2.30 மணி வரை பழ மலா்களால் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஸ்ரீகிர... மேலும் பார்க்க

திருச்சானூா் பிரம்மோற்சம்: சா்வ சுதந்திர வீரலட்சுமி அவதாரத்தில் தாயாா் வலம்

திருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு நடைபெற்று வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாள் காலை சா்வ சுதந்திர வீரலட்சுமி அவதாரத்தில் தாயாா் வலம் வந்தாா். திருச்சானூரில் குடிக்கொண்டுள்ள பத்மாவதி தாயார... மேலும் பார்க்க