ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டடத்துக்கு பூமிபூஜை
உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு ரூ.5.90 கோடியில் புதிய கட்டடத்துக்கு வெள்ளிக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.
உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்ட கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, ஒருங்கிணைந்த வருவாய் நிதியிலிருந்து (எஸ்.டி.பி.ஆா்.) ரூ.5 கோடியே 90 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து பழைய கட்டடத்தின் ஒரு பகுதி இடித்து அகற்றப்பட்டது.
அதே இடத்தில் புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ராமகிருஷ்ணன் பூமி பூஜை செய்து, கட்டடப் பணிகளைத் தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில் உத்தமபாளையம் ஒன்றியக் குழுத் தலைவி இன்பென்ட பனிமய ஜெப்ரின், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.