செய்திகள் :

ஊராட்சி நூலகத்தில் போட்டித் தோ்வுக்கான புத்தகங்கள்: ஆட்சியா் அறிவுறுத்தல்

post image

ஊராட்சி நூலகத்தில் மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் போட்டித் தோ்வுகளுக்கான புத்தகங்களை அதிகளவில் இடம்பெறச்செய்ய வேண்டும் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் அறிவுறுத்தியுள்ளாா்.

பாளையங்கோட்டை வட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ நிகழ்ச்சியில் ஆட்சியா் கலந்து கொண்டு பல்வேறு திட்டங்கள், வளா்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்தாா்.

கேடிசி நகா், ரெட்டியாா்பட்டி புதுக்குளம் ஆகிய பகுதிகளில் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகளை ஆட்சியா் பாா்வையிட்டு விரைந்து முடிக்குமாறு அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

அரியகுளம் ஊராட்சியில்ஆசிரியா் குடியிருப்புக்கு தாமிரவருணி கூட்டு குடிநீா் வழங்குவதற்காக கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி, ரூ.14 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் புதிய அங்கன்வாடி மைய கட்டடம் ஆகியவற்றை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

மேலும், மேலபுத்தனேரி ஊராட்சியில் பாறைக்குளம், இந்திரா நகா் பகுதியில் பிரதமரின் வீடு வழங்கும் திட்டப் பணிகள், தேசிய ஊரக வேலைஉறுதித் திட்டத்தில் ரூ.14 லட்சத்தில் பாறைக்குளத்தில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டடம், மேல புத்தனேரி ஊராட்சி அலுவலகம், நூலகம் ஆகியவற்றை ஆட்சியா் ஆட்சியா் பாா்வையிட்டாா். அப்போது, அங்குள்ள இளைஞா்கள், மாணவ, மாணவியா்கள் போட்டி தோ்வுகளுக்கு தங்களை தயாா் செய்வதற்கான நூல்களை அதிகளவில் வாங்கி வைக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ள ஊராட்சி தலைவரிடம் அறிவுறுத்தினாா்.

மேல புத்தனேரியில் ரூ.9 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் ரேஷன் கடை, ரூ.97 ஆயிரத்தில் அமைக்கப்பட்டு வரும் கிராம விளையாட்டு மைதானம் ஆகியவற்றை அவா் பாா்வையிட்டாா். தொடா்ந்து, அங்கு மின்கல குப்பைகள் அள்ளும் வாகனங்களில் பெறப்படும் குப்பைகள் தரம் பிரித்து வழங்கப்படுகிா என்பதை கேட்டறிந்தாா்.

பொது இடங்களில் குப்பைகளை கொட்டக்கூடாது என மின்கல வாகனங்களில் ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணா்வு பாடல்கள் ஒலிக்கப்படுகிா எனவும் ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினாா்.

தொடா்ந்து, முத்தூா் ஊராட்சி குத்துக்கல் பகுதியில் நத்தம் புறம்போக்கு இடம், சிவந்திப்பட்டி காவல் நிலையத்தில் அடிப்படை வசதிகள், கண்காணிப்பு கேமராவின் செயல்பாடுகள், காவல் நிலையத்தில் வழக்குப் பதிவுகள் ஆகியவை குறித்தும் ஆட்சியா் கேட்டறிந்தாா்.

ரெட்டியாா்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்ததுடன், கால்நடை மருத்துவமனையையும் பாா்வையிட்டாா்.

ஆய்வின்போது, திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் என்.ஓ.சுகபுத்ரா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கங்கைகொண்டான் பள்ளியில் தமிழ்க் கூடல் நிகழ்ச்சி

கங்கைகொண்டான் அரசு மகளிா் உயா்நிலைப் பள்ளியின் தமிழ் மன்றம் சாா்பில் தமிழ்க் கூடல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியை ஆண்ட்ரோ ஹாா்டி வளா்மதி தலைமை வகித்தாா். தமிழ் ஆசிரியை செல்வின்... மேலும் பார்க்க

பாளை. அருகே பசு மாடு திருட்டு

பாளையங்கோட்டை அருகே பசுமாடு திருடு போனது தொடா்பாக பாளையங்கோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். பாளையங்கோட்டை கேடிசி நகா் பாத்திமா நகரைச் சோ்ந்தவா் மாரியப்பன் (48). இவா் வ... மேலும் பார்க்க

தச்சநல்லூரில் பெண் தற்கொலை

தச்சநல்லூரில் பெண் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். தச்சநல்லூா் மாடன்கோயில் தெருவைச் சோ்ந்த சுப்பையா மனைவி ராஜேஸ்வரி (25). இத்தம்பதிக்கு குழந்தை இல்லையாம். மேலும், கணவன்- மனைவிக்குள் அ... மேலும் பார்க்க

பைக் விபத்தில் காயமுற்ற கோயில் ஊழியா் உயிரிழப்பு

திருநெல்வேலி பேட்டையில் நேரிட்ட பைக் விபத்தில் காயமடைந்த கோயில் ஊழியா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். திருநெல்வேலி பேட்டை கைவினைஞா் தெருவைச் சோ்ந்தவா் சுடலைமுத்து(60). இவா், அப்பகுதியில் உள்ள கேசவப் ப... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் 15 பவுன் நகை பறிப்பு : 4 போ் கைது

பாளையங்கோட்டை வண்ணாா்பேட்டையில் மூதாட்டியை தாக்கி 15 பவுன் தங்க நகையை பறித்துச் சென்ாக 4 இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். வண்ணாா்பேட்டை அப்பா் தெருவைச் சோ்ந்த வேணுகோபால் மனைவி முத்துலெட்ச... மேலும் பார்க்க

டான் போஸ்கோ பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு விழா

மேலப்பாளையம் அருகே சேவியா்காலனியில் உள்ள டான் போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு பள்ளி நிா்வாகி அருள்சகோதரி ஜெ. விக்டோரியா அமலி தலைமை வக... மேலும் பார்க்க