செய்திகள் :

எச்டிஎஃப்சி நிகர லாபம் 1.31% சரிவு!

post image

மும்பை: எச்டிஎஃப்சி வங்கியின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ஜூன் 2025 காலாண்டு முடிவில் 1.31 சதவிகிதமாக சரிந்து ரூ.16,258 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் வங்கியானது ரூ.16,475 கோடி நிகர லாபம் ஈட்டியது.

நாட்டின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான எச்டிஎஃப்சி அதன் முதல் காலாண்டில் ரூ.18,155 கோடி நிகர லாபம் ஈட்டியது. இதுவே ஒரு வருடத்திற்கு முன்பு ரூ.16,174 கோடியாக இருந்தது.

ஜூன் காலாண்டில் வங்கியின் மொத்த வருமானம் ரூ.99,200 கோடியாக உயர்ந்துள்ளது. இதுவே அதன் முந்தைய ஆண்டு, இதே காலத்தில் இது ரூ.83,701 கோடியாக இருந்தது.

மொத்த செலவுகள் ரூ.63,467 கோடியாகவும், இதுவே அதன் முந்தைய நிதியாண்டில் அதே காலத்தில் இது ரூ.59,817 கோடியாக இருந்தது. நிகர வட்டி வரம்பு முந்தைய காலாண்டில் 3.46 சதவிகிதத்திலிருந்து 3.35 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

ஒட்டுமொத்த ஒதுக்கீடுகளில் முந்தைய ஆண்டு இதே காலத்தில் ரூ.2,602 கோடியிலிருந்து ரூ.14,442 கோடியாக உயர்ந்துள்ளது. ஜூன் 30 ஆம் தேதி நிலவரப்படி செயல்பாடற்ற சொத்துக்கள் விகிதம் மூன்று மாதங்களுக்கு முன்பு 1.33 சதவிகிதத்திலிருந்து 1.4 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: 2025-ல் மிகவும் பிரபலமான இருசக்கர வாகனங்கள்!

HDFC Bank on Saturday posted a consolidated net profit of Rs 16,258 crore for the June 2025 quarter.

2025-ல் மிகவும் பிரபலமான இருசக்கர வாகனங்கள்!

புதுதில்லி: 2025ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் வெறும் கவனத்தை ஈர்ப்பதை விட அதிகமான டெக் செயல்திறன் உள்ளடக்கியது. தினசரி பயன்பாடு, நீண்ட பயணங்கள் மற்றும் மாறிவரும் சாலை நிலைமைகளை எ... மேலும் பார்க்க

ஜூனில் வீழ்ச்சியடைந்த தங்கம் விற்பனை

தங்கத்தின் அதிக மற்றும் ஏற்ற இறக்கமான விலைகள் காரணமாக கடந்த ஜூன் மாதத்தில் அதன் விற்பனை 60 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. இது, கரோனா நெருக்கடிக்குப் பிறகு தங்கம் விற்பனையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சரிவாகும... மேலும் பார்க்க

டெக் மஹிந்திரா வருவாய் ரூ.13,351 கோடியாக உயா்வு

முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் ஒன்றான டெக் மஹிந்திராவின் செயல்பாட்டு வருவாய் 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) ரூ.13,351 கோடியாக அதிகரித்துள்ளது.இது குறித்து நிறுவனம் வ... மேலும் பார்க்க

ரிலையன்ஸ் நிறுவனத்தின் முதல் காலாண்டு நிகர லாபம் 78% உயர்வு!

புதுதில்லி: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 78 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. எண்ணெய் மற்றும் எரிவாயு வணிகங்க... மேலும் பார்க்க

விப்ரோ: முதல் காலாண்டு வருவாய் 3% அதிகரிப்பு!

புதுதில்லி: ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 9.8 சதவிகிதம் அதிகரித்ததையடுத்து, ஐடி சேவை நிறுவனமான விப்ரோவின் பங்குகள் கிட்டத்தட்ட 3 சதவிகிதம் இன்று உயர்ந்து முட... மேலும் பார்க்க

பந்தன் வங்கியின் முதல் காலாண்டு நிகர லாபம் சரிவு!

கொல்கத்தா: தனியார் துறை கடன் வழங்குநரான பந்தன் வங்கி, வளர்ந்து வரும் தொழில்முனைவோர் வணிகத்தின் மீதான அழுத்தம், காரணமாக 2025-26 முதல் காலாண்டில் அதன் நிகர லாபம் குறைத்துள்ளதாக நுண்நிதி வங்கியான பந்தன் ... மேலும் பார்க்க