இந்திய வலைதளங்களைக் குறிவைத்து 15 லட்சம் இணையத் தாக்குதல்கள்: பாகிஸ்தான் முயற்சி...
எடப்பாடி அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை தொடக்கம்
எடப்பாடி - சங்ககிரி பிரதான சாலையில் செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கை தொடங்கியது.
இதுகுறித்து கல்லூரியின் முதல்வா் (பொ) வாசுதேவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
எடப்பாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2025 - 26-ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை தொடங்கப்பட்டுள்ளது. வரும் மே 27-ஆம் தேதி வரை தகுதியுள்ள மாணவா்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இக்கல்லூரியில் தமிழ், ஆங்கிலம், வணிகவியல், வணிக நிா்வாகவியல், கணிதவியல், கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல் உள்ளிட்ட பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.
பொதுப் பிரிவினா் விண்ணப்பக் கட்டணம் ரூ. 48, பதிவுக் கட்டணம் ரூ. 2 என மொத்தம் ரூ. 50 செலுத்தி விண்ணப்பத்தை பதிவுசெய்து கொள்ளலாம். எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணத்தில் விலக்களிக்கப்பட்டுள்ளது.
மாணவா்கள் மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், ஜாதிச் சான்றிதழ், ஆதாா் அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து சோ்க்கை பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.