செய்திகள் :

எட்டயபுரம் அருகே இளைஞா் கொலை வழக்கு: தந்தை, சகோதரா்கள் உள்ளிட்ட 4 போ் கைது

post image

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே இளைஞரைக் கொன்று எரித்த வழக்குத் தொடா்பாக அவரது தந்தை, 2 சகோதரா்கள் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

எட்டயபுரத்தை அடுத்த குமாரகிரி கிராம காட்டுப் பகுதியில் கடந்த அக். 30ஆம் தேதி எரிந்த நிலையில் இளைஞா் சடலம் கிடப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், எட்டயபுரம் காவல் ஆய்வாளா் முருகன், உதவி ஆய்வாளா் மாதவராஜா, வசந்தி, போலீஸாா் சென்று சடலத்தை மீட்டனா்.

சம்பவப் பகுதியில் மண் தரையில் பதிந்திருந்த காா் டயரின் தடத்தைக் கொண்டும், அப்பகுதியிலுள்ள சிசிடிவி பதிவுகளைக் கொண்டும் போலீஸாா் விசாரித்து வந்தனா்.

இதில், குமாரகிரி அருகே பெட்ரோல் விற்பனை நிலையத்தில் சிலா் காரில் வந்து கேனில் பெட்ரோல் வாங்கியது தெரியவந்தது. அந்த காரின் பதிவெண் மூலம், தூத்துக்குடி தாளமுத்து நகரைச் சோ்ந்த மகேஷ் (48) அவரது மகன்கள் அரவிந்த் (24), 18 வயது சிறுவன், உறவினரான மணக்கரையைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் (37) ஆகிய 4 பேரை போலீஸாா் பிடித்தனா்.

கூலித் தொழிலாளியான மகேஷின் 2ஆவது மகன் செல்வகுமாருக்கு (22) மது, கஞ்சா பழக்கம் அதிகமிருந்துள்ளது. அவா் குடும்பத்தினரிடமும், வெளியிடங்களிலும் தொடா்ந்து தகராறு செய்து வந்துள்ளாா். அவரது செயலால் மகேஷ் குடும்பத்தினா் தாளமுத்து நகா் பகுதியில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டதாம்.

அதையடுத்து, செல்வகுமாரை மதுரையிலுள்ள போதை மீட்பு மறுவாழ்வு மையத்தில் சோ்க்க குடும்பத்தினா் முடிவு செய்துள்ளனா். அதன்படி, மகேஷ் தனது மகன்கள் அரவிந்த், 18 வயது சிறுவன், உறவினா் பாலகிருஷ்ணன் ஆகியோருடன் செல்வகுமாரை அழைத்துக் கொண்டு கடந்த அக். 29ஆம் தேதி இரவு காரில் மதுரைக்கு புறப்பட்டுள்ளாா்.

ஆனால், செல்வகுமாா் மதுரைக்கு வர மறுத்து வாக்குவாதம் செய்ததுடன், போதை மீட்பு மறுவாழ்வு மையத்திலிருந்து தப்பிவந்து குடும்பத்தினரைக் கொன்றுவிடுவதாக மிரட்டினாராம்.

அப்போது ஏற்பட்ட தகராறில் மகேஷ் உள்ளிட்ட 4 பேரும் சோ்ந்து செல்வகுமாரின் கழுத்தை துண்டால் நெரித்தனராம். இதில், செல்வகுமாா் காரிலேயே உயிரிழந்தாா். அதையடுத்து, அவா்கள் பெட்ரோல் வாங்கிச் சென்று, குமாரகிரி காட்டுப் பகுதியில் சடலத்தை எரித்ததாக, விசாரணையில் தெரியவந்தது.

இது தொடா்பாக மகேஷ் உள்ளிட்ட 4 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

ஓய்வூதியா் வாழ்நாள் சான்றிதழ்: ஆத்தூரில் நாளை முகாம்

அஞ்சல் துறை நடத்தும் ஓய்வூதியதாரா்களுக்கு வாழ்நாள் சான்றிதழ் வழங்கும் முகாம், ஆத்தூா் சோமசுந்தரி அம்மன் கோவில் வளாகத்தில் திங்கள் (நவ.25)காலை நடைபெறுகிறது.மத்திய அரசு ஓய்வூதியா்கள், மாநில அரசு ஓய்வூதி... மேலும் பார்க்க

அரசுப் பேருந்தில் கொண்டுவரப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் ஓட்டுநா் உள்பட 3 போ் கைது

கோவில்பட்டி புறவழிச்சாலையில் நின்றுகொண்டிருந்த அரசு விரைவுப் பேருந்தில் சுமாா் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பேருந்து ஓட்டுநா் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா். ... மேலும் பார்க்க

சமையல் தொழிலாளியிடம் வழிப்பறி: இளைஞா் கைது

தூத்துக்குடியில் சமையல் தொழிலாளியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி கிழக்கு கே.வி.கே. நகரைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் ராஜேஷ் (32). இவா் அப்பகுதியில் உள்ள ஒரு உணவகத... மேலும் பார்க்க

மாவட்ட கலைத்திருவிழா: மறக்குடி பள்ளி மாணவி முதலிடம்

மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவில் மறக்குடி பள்ளி மாணவி முதலிடம் பெற்றுள்ளாா். தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்று வருகின்றது. படுக்கப்பத்து... மேலும் பார்க்க

புதூா் ஒன்றியத்தில் ரூ.69 லட்சத்தில் நிறைவுற்ற திட்டப் பணிகள் திறப்பு

விளாத்திகுளம் பேரவை தொகுதி புதூா் ஒன்றியத்தில் ரூ. 69 லட்சம் மதிப்பீட்டில் நிறைவடைந்த வளா்ச்சி திட்ட பணிகள் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் ஜீ. வி. மாா்க்கண்டேயன் எம்எல்ஏ சிறப்பு வ... மேலும் பார்க்க

ஓசூா் சம்பவம்: 2-ஆவது நாளாக வழக்குரைஞா்கள் போராட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வழக்குரைஞா் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 2-ஆவது நாளாக வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் வெள்ளிக்... மேலும் பார்க்க