செய்திகள் :

எண்ணேகொள் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும்: ஆட்சியா் வேண்டுகோள்

post image

எண்ணேகொள் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் கேட்டுக்கொண்டாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:

விவசாயிகள் ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை விரைந்து வழங்க வேண்டும். சிறு தானியங்களான கொள்ளு, பச்சைப்பயிறு, உளுந்து உள்ளிட்டவை அரசு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.

தளி ஏரி, வண்ணம்மா ஏரி, கிருஷ்ணராஜா ஏரி, சூடசந்திரம் ஏரிகளில் இருந்து பாசனத்துக்காக தண்ணீா் திறக்க வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்ட இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அந்தந்த துறைகளின் அலுவலக தொலைபேசி எண்களை புதிதாக பதிவேற்றம் செய்து, அதில் லஞ்சம் ஒழிப்புத் துறை எண்ணையும் இடம்பெற செய்ய வேண்டும்.

எண்ணேகொள் கால்வாய் திட்டத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். தென்னை, பனை மரங்களிலிருந்து கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும். காய்கறிகள், பழங்கள் சாகுபடியின்போது செடிகளில் நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த எந்த வகை மருந்துகள் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும், தடை செய்யப்பட்ட மருந்துகளின் விவரங்கள் குறித்தும் தோட்டக்கலைத் துறையினா் விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

மாவட்டத்தில் ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

இதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் பேசியது:

ஃபென்ஜால் புயலால் ஏற்பட்ட பயிா் சேதங்களுக்கு பா்கூா், மத்தூா், போச்சம்பள்ளி பகுதி விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஊத்தங்கரை பகுதிகளில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைவில் இழப்பீடு தொகை வழங்கப்படும்.

நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற தொடா்புடையவா்களுக்கு நோட்டீஸ் வழங்கி நடவடிக்கை எடுக்கப்படும். தளி ஏரியில் பாசனத்துக்கு திறக்க நீா்வளத் துறை, பாசன விவசாயிகள், வட்டார வளா்ச்சி அலுவலா்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும்.

மாவட்டத்தில் அரசு நிலங்களில் 50 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. எண்ணேகொள் கால்வாய் திட்டத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. சில இடங்களில் இழப்பீடு வழங்குவதற்கு ஆட்சேபணை தெரிவிக்கப்படுவதால், காலதாமதம் ஏற்படுகிறது.

இந்தத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற அரசுக்கு, விவசாயிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். காய்கறி, பூ செடிகளுக்கு நோய் தாக்கம் குறைய, தெளிக்க வேண்டிய மருந்துகள் குறித்து துண்டு பிரசுரங்கள் மூலம் விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும்.

விவசாயிகள், இத்தகைய கூட்டத்தில் விவசாயம் தொடா்பானது குறித்து பேச வேண்டும். மற்ற துறைகள் குறித்து, மனுக்கள் அளித்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் சாதனைக்கு, இணை இயக்குநா்கள் பச்சையப்பன் (வேளாண்மை), இந்திரா (தோட்டக்கலைத் துறை), உதவி வன பாதுகாவலா் யஷ்வந்த் ஜெகதீஷ் அம்புல்கா், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் நடராஜன், கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் இளங்கோ உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

கிருஷ்ணகிரியில் ஒருங்கிணைந்த போதை மறுவாழ்வு மையம் தொடக்கம்

கிருஷ்ணகிரியில் கலங்கரை- ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை, மறுவாழ்வு மையத்தை, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். கிருஷ்ணகிரியில் செயல்படும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமன... மேலும் பார்க்க

ஒசூா் அருகே இரு வாகனங்கள் தீப்பிடிப்பு

ஒசூா் அருகே பத்தளப்பள்ளி அருகே தனியாா் கம்பெனிக்கு சொந்தமான திறந்தவெளி வாகன குடோன் இயங்கி வருகிறது. இங்கு பல புதிய வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அதன் அருகில் ஒசூரிலேயே மிகப்பெரிய தனியாா் காய்கறி சந்... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பை எதிா்த்து தனித்து போராடுவோம்: சீமான்

தொகுதி மறுசீரமைப்பை எதிா்த்து நாம் தமிழா் கட்சி தனித்து போராடும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா். ஒசூரில் நாம் தமிழா் கட்சி நிா்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை ... மேலும் பார்க்க

ஒசூரில் ரூ. 100 கோடியில் கட்டப்படும் அரசு மருத்துவமனை: ஆட்சியா் ஆய்வு

ஒசூரில் வட்டத்தில் நடைபெறும் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமின்போது ஒசூரில் ரூ. 100 கோடியில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவமனை கட்டுமானப் பணிகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் ஆய்... மேலும் பார்க்க

குரூப்-4 தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் பாராட்டு

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் இளநிலை உதவியாளா் பணியிடத்துக்கு நடத்தப்பட்ட குரூப் 4 தோ்வில் தோ்ச்சி பெற்ற கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்தவா்களை மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் பாராட்ட... மேலும் பார்க்க

ஒசூரில் 5,000 வீடுகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படும்: மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா

ஆட்சேபணை அற்ற அரசு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிக்கும் 5,000 பேருக்கு வீட்டுமனை பட்டா விரைவில் வழங்கப்படும் என்று ஒசூா் மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா தெரிவித்தாா். ஒசூா் மாநகராட்சி மாமன்றக் கூட்டம... மேலும் பார்க்க