செய்திகள் :

எதிர்க்கட்சி எம்பிக்களை சந்தித்து வாழ்த்து பெற்ற பிரியங்கா!

post image

வயநாடு எம்பியாக பதவியேற்ற பிரியங்கா காந்தி மக்களவைக்கு வந்து எதிர்க்கட்சிகளுடன் உரையாடினார்.

கேரளத்தின் வயநாடு மக்களவைத் தொகுதி உறுப்பினராக காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா காந்தி வியாழக்கிழமையான நேற்று பதவியேற்றுக்கொண்டார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் 4-வது நாள் அமர்வு நேற்று கூடியதும், அரசமைப்புச் சட்ட புத்தகத்தின் பிரதியைக் கையில் ஏந்தியவாறு பிரியங்கா ஹிந்தியில் பதவியேற்றுக் கொண்டார்.

இந்த நிலையில், சம்பல் வன்முறை மற்றும் பிறச்னைகளுக்கு எதிராக காங்கிரஸ் மட்றறும் சமாஜ்வாதி கட்சியினர் உள்பட பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டம் நடத்திவந்த நிலையில், இரண்டாவது நாளாக மக்களவைக்கு வந்து தனது இருக்கையில் அமர்ந்தார் பிரியங்கா. பின்னர் போராட்டத்தின் மத்தியில், எதிர்க்கட்சி எம்.பி.க்களையும் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அவர் மற்ற உறுப்பினர்களைச் சந்தித்தார். பின்னர் ​​திமுக எம்பி கனிமொழியை சந்தித்து அவருடன் சிறிது நேரம் உரையாடினார். மேலும் அவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பிற கட்சி உறுப்பினர்களுடன் உரையாடினார்.

வங்கதேசம் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மௌனம் காக்கிறார்கள்: திரிபுரா முதல்வர்

வங்கதேசம் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மௌனம் காத்து வருவதாக திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அகர்தலாவில் அவர் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வங்கதேச விவகாரம் சர... மேலும் பார்க்க

தில்லியில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்!

தில்லியில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்!தில்லியின் பிரசாந்த் விஷார் பகுதியில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டலால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தில்லியில் நேற்று பிரசாந்த விஹார் பகுதிய... மேலும் பார்க்க

கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் சாத்தியமில்லை: துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்

கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் சாத்தியமில்லை என அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தில்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அமைச்சரவை விரிவாக்கத்திற்கான... மேலும் பார்க்க

மேக்கேதாட்டு அணை: பிரதமர் மோடியுடன் சித்தராமையா சந்திப்பு!

மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு அனுமதி அளிக்க வேண்டுமென பிரதமர் மோடியை கர்நாடக முதல்வர் சித்தராமையா நேரில் சந்தித்து கோரிக்கை மனுஅளித்துள்ளார்.காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கான முயற்ச... மேலும் பார்க்க

பரபரப்பான அரசியல் சூழலில் சொந்த கிராமத்துக்குச் சென்ற ஷிண்டே!

மகாராஷ்டிர தேர்தல் முடிந்து ஆறு நாள்கள் ஓடிவிட்டன. இன்னமும் முதல்வர் பதவிக்கு யார் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்படாத பரபரப்பான சூழலில் தனது சொந்த கிராமத்துக்கு வந்துவிட்டார் ஏக்நாத் ஷிண்ட... மேலும் பார்க்க

இனி வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்: லாலு பிரசாத் யாதவ்

நாட்டில் தேர்தல்கள் வாக்குசீட்டு முறையில் நடத்தப்பட வேண்டும் என்று ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார். மகாராஷ்டிரத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பா... மேலும் பார்க்க