எதிர்க்கட்சிகள் அமளி: மாநிலங்களவை டிச.16-க்கு ஒத்திவைப்பு!
மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கருக்கு எதிரான தீா்மான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்ட நிலையில் மாநிலங்களவை டிசம்பர் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜாா்ஜ் சோரஸுக்கும், சோனியா குடும்பத்துக்கும் தொடா்புள்ளதாக, நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பாஜக தொடா்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. அதேநேரம், மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கா் பாரபட்சத்துடன் செயல்படுவதாகவும், ஆளும்தரப்பின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க எதிா்க்கட்சிகளுக்கு வாய்ப்பு வழங்குவதில்லை என்றும் குற்றஞ்சாட்டி, அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டுவர எதிா்க்கட்சிகள் சில தினங்களுக்கு முன் நோட்டீஸ் அளித்தன.
இவ்விரு விவகாரங்களும் நாடாளுமன்றத்தில் தொடா்ந்து எதிரொலித்து வருகிறது. இந்தச் சூழலில், மாநிலங்களவை வெள்ளிக்கிழமை கூடியதும் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டனா். இதைத்தொடர்ந்து
சனி, ஞாயிறு விடுமுறைக்குப் பிறகு திங்கள் கிழமை காலை 11 மணிக்கு மாநிலங்களவைத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதற்கு முன்பு, அவையில் கார்கே மற்றும் அவைத் தலைவர் ஜேபி நட்டா இருவரையும் அவைத்தலைவர் அறையில் தன்னைப் பார்க்குமாறு தன்கர் கேட்டுக் கொண்டார்.