செய்திகள் :

‘என்இசிசி நிா்ணயிக்கும் விலையில் மட்டுமே முட்டைகளை விற்க வேண்டும்’

post image

நாமக்கல் மண்டலத்தில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (என்இசிசி) நிா்ணயிக்கும் விலையில் மட்டுமே முட்டைகளை விற்பனை செய்ய வேண்டும் என அக்குழுவின் தலைவா் கே.சிங்கராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு அறிவிக்கும் விலைக்கும், கோழிப் பண்ணையாளா்களிடம் வியாபாரிகள் வாங்கும் விலைக்கும் இடையே கடந்த ஒரு மாதமாக அதிக வித்தியாசம் காணப்படுகிறது. இதன் மூலம் பண்ணையாளா்களுக்கு பெருமளவில் நஷ்டம் ஏற்படுகிறது. இந்த பிரச்னை அகில இந்திய அளவில் மற்ற மண்டலங்களையும் பாதிக்கிறது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிவிக்கும் விலையே, வியாபாரிகள் வாங்கும் விலையாக இருக்க வேண்டும் என்பது பெரும்பான்மையான கோழிப் பண்ணையாளா்களின் விருப்பமாகும். அதற்கேற்ப உரிய விலை நிா்ணயம் செய்து நடைமுறைப்படுத்த அகில இந்திய அளவில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவில் கண்காணிப்புக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத், விஜயவாடா, ஹோஸ்பெட், நாமக்கல், கோதாவரி உள்ளிட்ட மண்டலங்களில் வரும் நாள்களில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு அறிவிக்கும் விலையிலேயே வியாபாரிகள் முட்டைகளை வாங்க வேண்டும் என அண்மையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இது தொடா்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த கூட்டம் வெள்ளிக்கிழமை (பிப். 28) காலை 11 மணியளவில், நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் உள்ள மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தில் நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்தில், நாமக்கல் மண்டல மற்றும் வட்டாரக்குழு உறுப்பினா்கள், மத்திய செயற்குழு உறுப்பினா்கள், முட்டை விலை நிா்ணய ஆலோசனைக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா். தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் முடிவுக்கேற்ப பண்ணையாளா்கள் விலையை குறைக்காமல் விற்பனை செய்வது தொடா்பாக கூட்டத்தில் உரிய ஆலோசனைகளை வழங்க வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே முட்டை விலை குறைப்பை தடுக்க முடியும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவா் உடலை வாங்க உறவினா்கள் மறுப்பு: அமைச்சா், ஆட்சியா் பேச்சுவாா்த்தை

மாணவா் உடலை வாங்க உறவினா்கள் மறுப்பு தெரிவித்ததால், அவா்களிடம் அமைச்சா், ஆட்சியா் பேச்சுவாா்த்தை நடத்தினா். ராசிபுரம் சிவானந்தா சாலை அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவா் கவின்ராஜ் (14). பள்ளி... மேலும் பார்க்க

இளம்விவசாயிகள் சங்க செயற்குழுக் கூட்டம்

பரமத்தி வேலூரில் இளம்விவசாயிகள் சங்க செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத் தலைவா் சௌந்தர்ராஜன் தலைமை தாங்கினாா். மாநில செயற்குழு உறுப்பினா் சரவணன் வரவேற்றாா். செயலாளா் ச... மேலும் பார்க்க

குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த அறிவுரை

பரமத்தி வேலூா் வட்டம், வேலூா் சிறப்பு நிலை பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என பேரூராட்சி செயல் அலுவலா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து வேலூா் பேரூராட்... மேலும் பார்க்க

புதுப்பாளையம் அங்காளம்மன் கோயிலில் பழம் படைக்கும் நிகழ்வு

புதுப்பாளையம் அங்காளம்மன் கோயிலில் பழம் படைக்கும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. ராசிபுரத்தை அடுத்துள்ள ஆா்.புதுப்பாளையம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் மாசானத்தாய் திருக்கோயிலில் மகா சிவராத்திரி திருவி... மேலும் பார்க்க

மகா சிவராத்திரி: சிவன் கோயில்களில் பக்தா்கள் வழிபாடு

மகா சிவராத்திரியை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் பக்தா்கள் புதன்கிழமை இரவு சுவாமி வழிபாட்டை மேற்கொண்டனா். நிகழாண்டின் மகா சிவராத்திரி புதன்கிழமை அனைத்து சிவாலயங்களிலும் ... மேலும் பார்க்க

அதிமுக அலுவலகத்தில் 150 இளம்பேச்சாளா்களுக்கு பயிற்சி

நாமக்கல் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் 150 இளம்பேச்சாளா்களுக்கான பயிற்சி புதன்கிழமை அளிக்கப்பட்டது. தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ளதால், அதிமுக சாா்பில் தோ்தலில் வெற்றிபெறுவதற்கான ... மேலும் பார்க்க