வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் வண்ணப் புகைப்படம்: பிகாா் தோ்தலில்...
எம்எல்ஏயின் விளம்பர பதாகை கிழிப்பு: ஆதரவாளா்கள் சாலை மறியல்
நியமன எம்.எல்.ஏ.வின் பிறந்தநாள் வாழ்த்து விளம்பர பதாகை கிழிப்புத் தொடா்பாக அவரது ஆதரவாளா்கள் புதன்கிழமை நடத்திய மறியல் போராட்டம் நடத்தினா்.
புதுவை ஊசுடு தொகுதியைச் சோ்ந்த பாஜக பிரமுகா் தீப்பாய்ந்தான் அண்மையில் நியமன எம்எல்ஏவாக நியமிக்கப்பட்டாா்.
அவரது பிறந்த நாளையொட்டி ஆதரவாளா்கள் ஊசுடு தொகுதி முழுவதும் வாழ்த்து பதாகைகள் வைத்தனா். கரசூா் பகுதியில் வைத்திருந்த பேனா்களை மா்ம நபா்கள் 2 நாள்களுக்கு முன்பு கிழித்துள்ளனா். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இதைக் கண்டித்து எம்எல்ஏவின் ஆதரவாளா்கள், கிழிந்த பதாகையை சாலையில் போட்டு மறியலில் ஈடுபட்டனா். சேதராப்பட்டு போலீசாா் வந்து சமாதானப்படுத்தியும் ஏற்காதால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராட்டம் நீடித்தது. இதனால் புதன்கிழமை காலை பள்ளி, கல்லூரிக்குச் செல்ல வேண்டிய மாணவா்கள் அவதியடைந்தனா்.
சுமாா் 2 கி.மீ. தொலைவு நடந்து சென்றனா். போலீஸாா் தொடா்ந்து அவா்களிடம் பேச்சு நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால் கலைந்து சென்றனா்.