பேருந்தில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: குற்றவாளியைக் கண்டுபிடிப்பவருக்கு 1 லட்...
‘எம்புரான்’ என் திரைவாழ்வில் மிகப்பெரிய படம்: மோகன்லால்
நடிகர் மோகன்லால் எம்புரான் திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.
நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடித்துள்ள திரைப்படம் எம்புரான். லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
மோகன்லாலுக்கு லூசிஃபர் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்ததால் எம்புரான் படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. பான் இந்தியா திரைப்படமாக வருகிற மார்ச் 27 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இதையும் படிக்க: துருவ நட்சத்திரம் வெளியீட்டுத் தேதி இதுதானா?
கேரளத்தில் மட்டுமல்லாது இந்தியளவிலும் இப்படம் வணிக ரீதியாக பெரிய வெற்றியைப் பதிவு செய்யலாம் எனத் தெரிகிறது. அந்த அளவிற்கு படம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.
இந்த நிலையில், இப்படம் குறித்து பேசிய மோகன்லால், “லூசிஃபர் படத்தின் இறுதியில் ஸ்டீஃபன் நெடுப்பள்ளியான நான் குரேஷி ஆபிரஹாமாக அறிமுகமானேன். எம்புரானில் ஆபிரஹாம் யார்? என விரிவாகப் பேசப்பட்டிருக்கிறது. எம்புரான் திரைப்படமே என் திரைவாழ்வில் மிகப்பெரிய படம் என நினைக்கிறேன். இப்படத்தில் மூன்றாம் பாகத்திற்கான தொடர்ச்சியை வைத்திருக்கிறோம். உங்களைப்போல நானும் மார்ச். 27 ஆம் தேதிக்குக் காத்திருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.