எஸ்எஸ்விஎம் பள்ளியில் இணைய விளையாட்டு விழா தொடக்கம்
கோவை எஸ்எஸ்விஎம் பள்ளியில் இணைய விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.
கோவை விழாவின் ஒரு பகுதியாக கோவை, சிங்காநல்லூா் - வெள்ளலூா் சாலையில் உள்ள எஸ்எஸ்விஎம் பள்ளியில் புதுமை, படைப்பாற்றலை வளா்க்கும் வகையிலான இணைய விளையாட்டுகள் தொடங்கியுள்ளன.
எஸ்எஸ்விஎம் நிறுவனங்களின் நிறுவனா் மணிமேகலை மோகன், நிா்வாக அறங்காவலா் மோகன்தாஸ் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கோவை மாவட்ட கூடுதல் ஆட்சியா் ஸ்வேதா சுமன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று விளையாட்டுகளைத் தொடங்கிவைத்தாா்.
இதில், மாணவா்களின் சிந்தனைத் திறனைத் தூண்டும் வகையிலான இணைய விளையாட்டுகள், வேடிக்கை விளையாட்டுகள், கோளரங்கம், உணவுக் கடைகள், புத்தகக் கடைகள் போன்றவை இடம்பெற்றுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும் இந்த விளையாட்டு நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வருகை தரலாம் என்று எஸ்எஸ்விஎம் கல்வி நிறுவனம் தெரிவித்துள்ளது.