செய்திகள் :

எஸ்கே - 25 படப்பிடிப்பு துவக்கம்!

post image

சிவகார்த்திகேயன் - சுதா கொங்காரா படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.

அமரன் திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் பெரிய நட்சத்திர நடிகராக வளர்ந்துள்ளார். இப்படத்திற்குப் பின் தன் சம்பளத்தையும் ரூ. 60 கோடி வரை உயர்த்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல்.

அமரன் படத்தை முடித்தபின் இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸின் படமொன்றில் நடித்து வருகிறார். எஸ்கே - 23 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதையும் படிக்க: ஜெயம் ரவி - 34 பூஜை!

இதைத் தொடர்ந்து, இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் தன் 24-வது படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் தன் 25-வது படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.

ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு இன்று சென்னையில் துவங்கியுள்ளது.

இதில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவிக்கு இடையேயான சில காட்சிகள் எடுக்கப்படுகிறதாம். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் எஸ்கே - 25 படத்தில் நடிகர்கள் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை - 2 படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ்!

விடுதலை - 2 திரைப்படத்திற்கு தணிக்கை வாரியம் ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் விடுதலை - 2 திரைப்படம் டிச. 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளி... மேலும் பார்க்க

காதல் என்பது பொதுவுடைமை வெளியீட்டுத் தேதி!

காதல் என்பது பொதுவுடமை படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன்இயக்கத்தில் உருவான திரைப்படம் காதல் என்பது பொதுவுடமை. நவீன காதல் கதையைப் பேசும் படமாக உருவான இத... மேலும் பார்க்க

பெண் குழந்தைக்குத் தாயான ராதிகா ஆப்தே!

நடிகை ராதிகா ஆப்தேவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.தமிழில் ஆல்இன்ஆல் அழகுராஜா, கபாலி ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை ராதிகா ஆப்தே. தமிழில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும் பாலிவுட் பட உலகில் ராத... மேலும் பார்க்க

ஜெயம் ரவி - 34 பூஜை!

நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் அவரது 34-வது படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.நடிகர் ஜெயம் ரவியின் 34-வது படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. டாடா இயக்குநர் கணேஷ் பாபு இயக்கும் இப்படத்தில் நாயகியாக தவ... மேலும் பார்க்க

த்ரிஷாவின் 22 ஆண்டுகால திரைப் பயணம்..! கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு!

சூர்யா 45 படப்பிடிப்பில் நடிகை த்ரிஷாவின் 22 ஆண்டுகால நிறைவையொட்டி படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். இந்த விடியோவினை தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் ஃபிக்சர்ஸ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்... மேலும் பார்க்க

டூரிஸ்ட் ஃபேமிலி: டப்பிங் பணிகளை தொடங்கிய சசிகுமார்!

நடிகர் சசிகுமார் புதியதாக நடித்துள்ள டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார். இந்தப் படத்தில் சசிகுமாருடன் நடிகை சிம்ரன் நடித்துள்ளார்.இந்தப் படத்தினை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்... மேலும் பார்க்க