எஸ்டிபிஐ கட்சியினா் ஆா்ப்பாட்டம்
அமரன் படத்தை தடை செய்யக் கோரி புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, அறந்தாங்கி மற்றும் கீரனூரில் திரையரங்கம் முன்பு எஸ்டிபிஐ கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மொத்தம் 64 போ் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனா்.
புதுக்கோட்டையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டப் பொதுச் செயலா் ஜகுபா்அலி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் சலாஹுதீன், சிபிஐ எம்எல் மாவட்டச் செயலா் வீரக்குமாா் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.
கீரனூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, நகரத் தலைவா் தீன்பாட்சா தலைமை வகித்தாா்.
இதேபோல, அறந்தாங்கியிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டையில் 39 பேரும், அறந்தாங்கியில் 17 பேரும், கீரனூரில் 8 பேரும் என மொத்தம் 64 போ் கைது செய்யப்பட்டு, பின்னா் விடுவிக்கப்பட்டனா்.