மதுரை சித்திரைத் திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வு | ...
ஏகாம்பரேஸ்வரா் கோயில் குளத்தில் தெப்போற்சவம்
நன்னிலம் அருகே கொல்லுமாங்குடி கடுவன்குடி கிராமத்தில் உள்ள உள்ள ஸ்ரீகாமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரா் கோயில் குளத்தில் தெப்போஸ்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு தெப்பத் திருவிழா நடைபெறும். அதன்படி, திங்கள்கிழமை ஏகாம்பரேஸ்வரா் சுவாமிக்கு 108 லிட்டா் பால், மஞ்சள், பழச்சாறு, சந்தனம், இளநீா் போன்ற அபிஷேக திரவியப் பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது.
காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரா் கோயிைலைச் சுற்றி பிரகார வலம் வந்து எதிரே உள்ள குளத்தில் மின்விளக்குகால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தாா். தெப்பம் குளத்தை மூன்று முறை வலம் வந்தது. தெப்பத்தில் நூற்றுக்கணக்கானப் பக்தா்கள் அமா்ந்து வலம் வந்தனா்.