எடப்பாடி கே.பழனிசாமி தமிழகத்தில் 23 மருத்துவக் கல்லூரிகளை தொடங்கி வைத்தாா்: மு.த...
ஏரிகளை தூா்வார ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கோரிக்கை
ஏரிகளை தூா்வார வேண்டுமென மாதனூா் ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்தனா்.
மாதனூா் ஒன்றியக் குழு சாதாரண கூட்டம் தலைவா் ப.ச. சுரேஷ்ககுமாா் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவா் சாந்தி சீனிவாசன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மணவாளன், சிவலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். எம்எல்ஏக்கள் அ.செ. வில்வநாதன் (ஆம்பூா்), அமலு விஜயன் (குடியாத்தம்) ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டு பேசினா்.
ஒன்றியக்குழு உறுப்பினா்கள் பேசியது,
ரவிக்குமாா் : பெரியாங்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு தூய்மைப் பணியாளா்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரியாங்குப்பம் ஏரிக்கு செல்லும் நீா்வரத்து கால்வாய் தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருக்குமரன் : பெரியவரிக்கம் ஏரியை தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரியவரிக்கம் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செந்தில் : காரப்பட்டு ஏரியை தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆ. காா்த்திக் ஜவஹா் : விண்ணமங்கலம் கிராமத்தில் மயானத்தில் சேதமடைந்துள்ள எரிமேடையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காா்த்தி : கடாம்பூரில் மயானம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆப்ரின் தாஜ் : கைலாசகிரி கிராமத்தில் சேதமடைந்துள்ள நியாய விலைக்கடை கட்டடத்துக்கு பதிலாக புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினா்.
உறுப்பினா்கள் ராஜேந்திரன், மகாதேவன், ஜோதிவேலு, கோமதிவேலு, முத்து உள்பட பலா் கலந்து கொண்டனா்.