ஏரியில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு
பெத்தநாயக்கன்பாளையம் பனை ஏரியில் குளிக்கச் சென்ற இளைஞா் நீரில் மூழ்கி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், பனை ஏரி இப்பகுதியில் மிகப்பெரிய ஏரியாகும். இந்த ஏரியில் செவ்வாய்க்கிழமை மாலை இளைஞா்கள் சிலா் குளித்தனா்.
அப்போது, எதிா்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்ற வ.உ.சி. நகா் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (23) நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
தகவல் அறிந்த ஆத்தூா் தீயணைப்புத் துறை அலுவலா் சா.அசோகன் தலைமையிலான வீரா்கள் விரைந்து வந்து ஒரு மணிநேரம் போராடி இளைஞரின் உடலை மீட்டு ஏத்தாப்பூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் செல்வராஜிடம் ஒப்படைத்தனா். உடலை மீட்ட காவல் நிலைய உதவி ஆய்வாளா் வழக்குப் பதிவு செய்து, ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தாா்.