Eng vs Ind: "தோனியாகவோ, கோலியாகவோ சுப்மன் கில் ஆக முடியாது; ஏனெனில்.." - ஹர்பஜன்...
ஏர் இந்தியா விபத்து: என்ன நடந்தது தெரியுமா? - அமெரிக்க விசாரணை அமைப்பின் தகவல்கள்
அகமதாபாத் நகரில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தின் விசாரணையில் புதிய திருப்பம் ஏற்படலாம் என்று அமெரிக்காவை சேர்ந்த விமான விபத்து விசாரணை அமைப்பான ’என்.டி.எஸ்.பி.’ பதிவிட்டுள்ளது.
அகமதாபாத்தில் கடந்த ஜூன் மாதம் 12-ஆம் தேதி ஏர் இந்தியா விமானம் ‘ஏஐ-171’ விபத்துக்குள்ளானதில் 270-க்கும் மேற்பட்ட உயிர்கள் பறிபோயின.
இந்தநிலையில், விபத்துக்குள்ளான விமானம் நடுவானுக்கு பறக்க முற்படும்போது, திடீரென இன்ஜின்களுக்கு பாயும் எரிபொருள் தடைபட்டது ஏன்? என்பதை ஆய்வு செய்து வருவதால் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இiது குறித்து, அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம்(என்.டி.எஸ்.பி.) தலைவர் ஜெனிஃபெர் ஹோமெண்டி தெரிவித்திருப்பதாவது, “இதுபோன்ற பெரும் விமான விபத்தில் உண்மையில் நடந்தது என்ன? என்பதை கண்டறிய, நிச்சயம் கால அவகாசம் கூடுதலாக தேவைப்படும்.
ஏர் இந்தியா விபத்து குறித்து அண்மையில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கைகள், ஊகத்தின் அடிப்படையில் சொல்லப்பட்டிருப்பவையே.
இப்போதே, ’விபத்துக்கு இதுதான் காரணம்’ என்று ஒரு முடிவுக்கு வந்துவிட்டால், அது தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும்” என்று சமூக ஊடகங்களில் பதிவிட்டிருக்கிறார்.
முன்னதாக, இதே கருத்தையே ஏர் இந்தியா தலைமை செயல் அதிகாரி கேம்ப்பெல் வில்சனும் விமான விபத்து புலனாய்வு அமைப்பு(ஏ.ஏ.ஐ.பி.)யும் வலியுறுத்தியுள்ளனர்.
ஏ.ஏ.ஐ.பி.யின் முதல்கட்ட விசாரணை அறிக்கையின்படி, ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில விநாடிகளிலேயே... விமானத்திலுள்ள கட்டுப்பாட்டு ஸ்விட்சுகள் இரண்டும் ‘ஸ்விட்ச்-ஆஃப்’ நிலைக்கு அமுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை உடனடியாக கவனித்த விமானி, அந்த ஸ்விட்சுகளை மீண்டும் ’ஸ்விட்ச்-ஆன்’ நிலைக்கு தள்ளிவிட்டார். ஆனால், அதற்குள் விபத்து நிகழ்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இன்ஜின்களுக்கு எரிபொருள் பாய்வது தடைபட்டிருப்பதுடன், விமானம் மேலே பறக்க முடியாமல் விழுந்துள்ளது.
விமானி அறையினுள் உள்ள ஒலிப்பதிவு செய்யும் கருவியில்(காக்பிட் டிவைஸ்), விபத்துக்கு முன் விமானிகள் இருவரும் பேசிக்கொண்டவை பதிவாகியுள்ளன.
அதில், முதல்நிலை அதிகாரியான பைலட் க்ளைவ் குந்தர் விமானத்தின் கேப்டன் சுமீத் சபர்வாலிடம் ‘ஏன் அந்த ஸ்விட்சுகளை கீழே அமுக்கி விட்டுருக்கிறீர்கள்?’ என்று வினவியுள்ளார். அதற்கு அந்த கேப்டன் ‘நான் அப்படிச் செய்யவில்லையே’ என்று பதிலளித்திருக்கிறார்.
இந்தநிலையில், விபத்து குறித்து விசாரிக்கும் விசாரணை அதிகாரிகள், அந்த ஸ்விட்சுகள் எப்படி ’ஸ்விட்-ஆஃப்’ நிலைக்கு சென்றன. இதற்கு தொழில்நுட்பக் கோளாறு காரணமா? அல்லது மனித தவறா? அல்லது வேறு காரணங்களா? என்று பல கோணங்களிலும் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.இந்த விபத்து குறித்த விரிவான விசாரணை அறிக்கை வெளியாக ஓராண்டு காலம் அல்லது அதற்கும் மேல் ஆகக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது.