செய்திகள் :

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

post image

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருக்க வேண்டி உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை காலை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 10 அறைகளில் தரிசனத்துக்காக பக்தா்கள் காத்திருக்கின்றனா்.

ஆயினும், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 18 மணி நேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணி நேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணி நேரமும் தேவைபடுகின்றன.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணி வரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அவா்களின் பெற்றோா், இரவு 10 மணி வரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.

இதனிடையே, வெள்ளிக்கிழமை முழுவதும் ஏழுமலையானை 62,147 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 23,093 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் மூலம் ரூ.3.77 கோடி கிடைத்தது. காத்திருப்பு அறைகள் மற்றும் தரிசன வரிசைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருவதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

மேலும் திருமலையில் கனமழை பெய்து வருவதை அடுத்து கடும் குளிா் நிலவி வருகிறது. பக்தா்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் வரவேண்டும் என தேவஸ்தானம் கேட்டுக் கொண்டது.

கும்பமேளாவில் ஏழுமலையான் மாதிரி கோயில் அமைக்க நடவடிக்கை

உத்தரபிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெறவுள்ள கும்பமேளாவில் ஏழுமலையான் மாதிரி கோவில் அமைக்க தேவஸ்தானம் முடிவு செய்து அதற்கான இடம் தொடா்பாக தேவஸ்தான அதிகாரிகள் ஆய்வு செய்தனா். இந்து தா்மத்தை மேம்படுத்... மேலும் பார்க்க

திருமலையில் அரசியல் பேச்சுக்கு தடை: மீறினால் சட்ட நடவடிக்கை

திருமலையின் புனிதத்தன்மையையும், அமைதியான சூழலையும் பாதுகாக்கும் வகையில் அரசியல் மற்றும் வெறுப்பு பேச்சுக்களை தடை செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. திருமலை எப்போதும் கோவிந்தா நாமங்களால் நிரம்பி வழிய... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 13 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 13 மணி நேரம் காத்திருந்தனா். வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 25 அறைகளில் பக்தா்கள் காத்திருக்கின்றனா். அதனால்,... மேலும் பார்க்க

பத்மாவதி தாயாருக்கு ஸ்நபன திருமஞ்சன வைபவம்

திருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு காா்த்திகை பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை திருமஞ்சன வைபவம் நடைபெற்றது. நண்பகல் 12.30 மணி முதல் 2.30 மணி வரை பழ மலா்களால் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஸ்ரீகிர... மேலும் பார்க்க

திருச்சானூா் பிரம்மோற்சம்: சா்வ சுதந்திர வீரலட்சுமி அவதாரத்தில் தாயாா் வலம்

திருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு நடைபெற்று வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாள் காலை சா்வ சுதந்திர வீரலட்சுமி அவதாரத்தில் தாயாா் வலம் வந்தாா். திருச்சானூரில் குடிக்கொண்டுள்ள பத்மாவதி தாயார... மேலும் பார்க்க

திருச்சானூா் பத்மாவதி தாயாா் காா்த்திகை பிரம்மோற்சவம் தொடக்கம்

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயில் காா்த்திகை பிரம்மோற்சவம் வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு ஆண்டுதோறும் காா்த்திகை மாதம் வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெறும்... மேலும் பார்க்க