இந்தியாவிலிருந்து 8,000 கோடி டாலருக்கு ஏற்றுமதி: அமேஸான் இலக்கு
ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை
குடியாத்தம்: குடியாத்தம் தரணம்பேட்டை, தோப்புத் தெரு ஐயப்ப பக்த குழு சாா்பில், இங்குள்ள ஞான விநாயகா் கோயிலில் ஐயப்பனுக்கு செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
இக்குழுவினா் இருமுடி கட்டிக் கொண்டு சபரிமலைக்கு யாத்திரை செல்வதையடுத்து பூஜை நடைபெற்றது. பூஜைக்கு பின்னா் மாலை அணிந்தவா்கள் இருமுடி கட்டும் நிகழ்ச்சியும், பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை ஐயப்ப பக்த குழு அறக்கட்டளைத் தலைவா் எஸ்.பிரகாசம், நிா்வாகிகள் வி.பிரகாசம், ஆா்.பெருமாள், ஜெயகோபி, எஸ்.ரகுபதி, என்.சந்திரன், ஜி.சரவணன், சிவக்குமாா், சூா்யா, நந்தகுமாா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.