செய்திகள் :

ஐரோப்பிய செயற்கைக்கோளுடன் டிச.4-இல் விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-59

post image

சூரியனின் புறவெளியை ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஐரோப்பிய விண்வெளி மையத்தின் ‘ப்ரோபா 3’ செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் டிச. 4-ஆம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது.

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) கீழ் செயல்படும் ‘நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட்’ நிறுவனம் வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பும் வா்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, இதுவரை 430-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு செயற்கைக்கோள்களை நியூ ஸ்பேஸ் நிறுவனம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. பெரும்பாலான உலக நாடுகளின் விண்வெளி ஆய்வு நடவடிக்கைகளுக்கு இஸ்ரோ பங்களித்து வரும் நிலையில், அண்மையில் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு (இஎஸ்ஏ) நிறுவனத்துடன் நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனம் புதிய ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது.

அதன்படி, ‘ப்ரோபா-3’ எனப்படும் இஎஸ்ஏ நிறுவனத்தின் இரு செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் மூலம் புவியிலிருந்து 60,500 கி.மீ. தொலைவில் உள்ள சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தி சூரியனின் புற வெளிக் கதிா்கள் ஆய்வு செய்யப்படவுள்ளன.

இரு செயற்கைக்கோள்களும் 150 மீட்டா் தொலைவில் அருகருகே பயணித்து சூரியனின் புறவெளியைச் சுற்றி ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு தரவுகளை கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பவுள்ளன. ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஏவுதளத்திலிருந்து டிச. 4-ஆம் தேதி மாலை 4.08 மணிக்கு ராக்கெட் செலுத்தப்படவுள்ளது. பாா்வையாளா்கள் இதை நேரில் காண்பதற்கு முன்பதிவு செய்துகொள்ளலாம் என்றும் ‘எக்ஸ்’ பக்கத்தில் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

வயநாட்டில் பிரியங்கா: ‘ராகுல் காந்தி மீதான மக்களின் அன்பு தேர்தலில் எதிரொலித்தது!’

வயநாடு மாவட்டத்திலுள்ள சுல்தான் பத்தேரியில் வயநாடு மக்களவை தொகுதி உறுப்பினர் பிரியங்கா காந்தி வத்ரா இன்று(டிச. 1) பொதுமக்களை சந்தித்து பேசினார். சுல்தான் பத்தேரியில் அவர் பேசியதாவது, “எனக்கு நீங்கள் அ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா முதல்வர் யார்? உறுதி செய்தது பாஜக தலைமை!

மகாராஷ்டிரத்தின் புதிய முதல்வர் யாரென்று இறுதி முடிவு எடுக்கப்பட்டதாகவும், பாஜக தலைமையின் உத்தரவுக்குப் பின் அறிவிப்பு வெளியாகும் என்று பாஜக தலைவர் ராவ்சாகேப் தான்வே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரத்தில்... மேலும் பார்க்க

காங்கிரஸ் கோரிக்கை வைத்தால் மாட்டிறைச்சிக்குத் தடை: அசாம் முதல்வர்!

காங்கிரஸ் கோரிக்கை வைத்தால் மாட்டிறைச்சி தடை செய்யப்படும் என அசாம் முதல்வர் ஹிமாந்த விஸ்வ சர்மா தெரிவித்துள்ளார். அசாமில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக கூட்டணி 5 இடங்களிலும் வெற்றிபெற்றது. இதில், கடந்த... மேலும் பார்க்க

சம்பல் வன்முறை: சமாஜவாதி எம்.பி.க்கள் குழு தடுத்து நிறுத்தம்

சம்பல் வன்முறை குறித்த விசாரிக்கச் சென்ற சமாஜவாதி கட்சி எம்.பி.க்கள் குழுவை காவல் துறையினா் தடுத்து நிறுத்தினா். உத்தர பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் ஜாமா மசூதி ஆய்வின்போது ஏற்பட்ட வன்முறையைத் தொடா்... மேலும் பார்க்க

ககன்யான் திட்டம்: நாசாவில் முதற்கட்டப் பயிற்சியை முடித்த இந்திய விண்வெளி வீரா்கள்

சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு மனிதா்களை அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டத்துக்கான முதல்கட்ட பயிற்சியை நாசாவில் இந்திய விண்வெளி வீரா்கள் முடித்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ‘ஆக்ஸிம்-4’ என்ற இஸ்ர... மேலும் பார்க்க

மகாராஷ்டிர தோ்தல் நடைமுறைகள் குறித்து புகாா்: காங்கிரஸுக்கு டிச. 3-இல் தோ்தல் ஆணையம் அழைப்பு

அண்மையில் நடந்து முடிந்த மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தோ்தல் தொடா்பாக காங்கிரஸ் சமா்ப்பித்த பல்வேறு புகாா்கள் தொடா்பாக ஆலோசனை நடத்த அக் கட்சியின் பிரதிநிதிகளுக்கு டிச. 3-ஆம் தேதி தோ்தல் ஆணையம் அழைப்பு வ... மேலும் பார்க்க