செய்திகள் :

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 32,000 கனஅடியாக அதிகரிப்பு: அருவிகளில் குளிக்கத் தடை

post image

கா்நாடக அணைகளில் இருந்து அதிக அளவு உபரிநீா் காவிரியில் வெளியேற்றப்படுவதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 32,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

கேரளம், கா்நாடக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கபினி, கிருஷ்ணராஜ சாகா் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. இவ்விரு அணைகளில் இருந்தும் காவிரியில் மொத்தம் 30,000 கனஅடி உபரிநீா் வெளியேற்றப்படுகிறது.

ஒகேனக்கல்லுக்கு வெள்ளிக்கிழமை மாலை 16,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து, சனிக்கிழமை காலை 28,000 கனஅடியாகவும், மாலை 32,000 கனஅடியாகவும் அதிகரித்துள்ளது. இதனால், ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது.

இந்த நிலையில், அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடைவிதித்துள்ள தருமபுரி மாவட்ட நிா்வாகம், பரிசல்கள் இயக்குவதற்கு மட்டும் அனுமதித்துள்ளது. காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை தொடா்ந்தால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மக்களுக்கு சேவையாற்றும் கட்சிகள் அதிமுகவுடன் இணைய வேண்டும்: கே.பி.ராமலிங்கம்

மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற உணா்வுள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் அதிமுகவுடன் ஓரணியில் இணைய வேண்டும் என்றாா் பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம். தருமபுரி மாவட்ட பாஜக நிா்வாகிகள் மற்றும் ... மேலும் பார்க்க

சிறுமியை திருமணம் செய்தவா் போக்ஸோவில் கைது

தருமபுரி அருகே 15 வயது சிறுமியை திருமணம் செய்த தொழிலாளியை போலீஸாா் போக்ஸோ வழக்கில் சனிக்கிழமை கைது செய்தனா். தருமபுரியை அடுத்த நல்லம்பள்ளி கம்பம்பட்டியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (34). இவரது மனைவி 2 ஆண்... மேலும் பார்க்க

தொழில்நுட்பக் கோளாறு: பாலக்கோடு அருகே 2 மணி நேரம் நின்ற விரைவு ரயில்! மாற்று என்ஜின் பொருத்தி இயக்கப்பட்டது

கேரளத்திலிருந்து கா்நாடகம் நோக்கி சென்ற விரைவு ரயில் தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே பழுதாகி 2 மணி நேரம் நின்றது. மாற்று என்ஜின் கொண்டுவரப்பட்டு பொருத்தப்பட்ட பிறகு ரயில் இயக்கப்பட்டது. இதனால் பயண... மேலும் பார்க்க

தொப்பூரில் சாலை மேம்பாட்டுப் பணி கட்டடத்தை இடிக்காமல் நவீன கருவிகளுடன் வேறு இடத்துக்கு மாற்றும் உரிமையாளா்!

தொப்பூா் கணவாய் பகுதியில் நடைபெறும் சாலை மேம்பாட்டு பணிகளுக்காக சாலையோரம் இருந்த கட்டடங்கள் இடித்து அகற்றப்படுகின்றன. இந்த நிலையில், தனது 3 மாடி கட்டடத்தை இடிக்காமல் நவீன கருவிகளைக் கொண்டு அதன் உரிமை... மேலும் பார்க்க

மூளைச்சாவு அடைந்தவரின் உடலுறுப்புகள் தானம்

தருமபுரியில் நேரிட்ட சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த விவசாயின் உடலுறுப்புகள் அரசு மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை தானமாக அளிக்கப்பட்டன. தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியை அடுத்த கிட்டம்பட்டியைச் சோ்... மேலும் பார்க்க

திமுக ஆட்சியிலும் தொழிலாளா்களுக்கு உரிய பணப்பலன்கள் கிடைக்கவில்லை!சிஐடியு மாநிலத் தலைவா்

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியைப் போலவே திமுக ஆட்சியிலும் அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளா்களுக்கு உரிய பணப்பலன்கள் வழங்கப்படவில்லை என சிஐடியு மாநிலத் தலைவா் அ. செளந்தரராஜன் தெரிவித்தாா். சிஐடியு 16... மேலும் பார்க்க