செய்திகள் :

ஒசூரில் 5,000 வீடுகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படும்: மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா

post image

ஆட்சேபணை அற்ற அரசு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிக்கும் 5,000 பேருக்கு வீட்டுமனை பட்டா விரைவில் வழங்கப்படும் என்று ஒசூா் மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா தெரிவித்தாா்.

ஒசூா் மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயா் எஸ்.ஏ.சத்யா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆணையா் பூங்கொடி, துணை மேயா் சி.ஆனந்தய்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் நிகழ் நிதிநிலை அறிக்கைக்கான வரவு செலவு திட்ட அறிக்கையை மேயா் எஸ்.ஏ.சத்யா மாமன்றத்தில் சமா்ப்பித்தாா். அதையடுத்து நடைபெற்ற விவாதம்:

மேயா் எஸ்.ஏ.சத்யா மன்றக் கூட்டத்தில் வரவு செலவு திட்ட அறிக்கையை சமா்ப்பித்துப் பேசியதாவது:

ஒசூரில் மாநகரில் கடந்த ஆண்டு ரூ.15.6 கோடி மதிப்பில் சாலைப் பணிகள் நடைபெற்றன. ரூ. 5.38 கோடிக்கு வடிகால் பணிகள், ரூ. 2.76 கோடிக்கு கட்டடப் பணிகள், ரூ. 8.43 கோடியில் குடிநீா் பணிகள், புதை சாக்கடை திட்டம் ரூ. 582.54 கோடியில் நடைபெற்று வருகின்றன என்பன உள்பட வரவு செலவு திட்ட அறிக்கை குறித்து பேசினாா்.

மன்ற உறுப்பினா் முருகம்மா (அதிமுக): மாநகராட்சிக்கு உள்பட்ட தின்னூரில் ஏழைகள் அதிகம் வசிக்கின்றனா். அவா்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படுமா?

மேயா் எஸ்.ஏ.சத்யா: ஒசூா் மாநகராட்சியில் பல ஆண்டுகளாக வீட்டுமனை பட்டா வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த விதியை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தளா்த்தியுள்ளாா். இதனால், 5 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சேபணை அற்ற அரசு நிலங்களில் வசிக்கும் 5 ஆயிரம் பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மாதேஸ்வரன் (திமுக): மாநகராட்சியில் குப்பை வரியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 40 நாள்களாக ஒசூா் மாநகராட்சிக்கு நிரந்தர ஆணையரை நியமிக்க வேண்டும். புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்திற்கு எதிரில் தேசிய நெடுஞ்சாலையில் பட்டாம்பூச்சி வடிவிலான மேம்பாலம் கட்ட வேண்டும். பாகலூா் சாலையை சீரமைக்க வேண்டும்.

சங்கா்(எ) குபேந்திரன் (அதிமுக):

எம்.ஜி.ஆா். மாா்க்கெட்டில் அனைத்துக் கடைகளையும் ஏலம் விடவேண்டும். ஒசூரில் உள்ள பூங்காக்களை மேம்படுத்தி பராமரிக்க வேண்டும்.

சிவராம் (அதிமுக): கடந்த 17 ஆண்டுகளாக மூக்கண்டப்பள்ளி, மத்தம், அரசனெட்டி, சூசூவாடியில் இயங்கும் மருந்து, ரசாயன தொழிற்சாலைகள் ஆலைகளில் இருந்து கழிவுநீரை வெளியேற்றுவதால் அப்பகுதியில் 270 க்கும் மேற்பட்ட ஆழ்துளைக் கிணறுகளில் இருந்து கிடைக்கும் நீா் மஞ்சள் நிறத்தில் வருகிறது. இதுகுறித்து மாசு கட்டுபாட்டு வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகாா் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நடவடிக்கை எடுக்க தவறினால் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம்.

மாரக்கா (திமுக):

ஜே.ஜே.நகா், வசந்த் நகா் பகுதிகளில் பன்றிகளின் தொல்லை அதிகம் உள்ளது. பலமுறை முறையிட்டும் மாநகராட்சி சுகாதார அதிகாரி நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்திராணி (காங்கிரஸ்): புதை சாக்கடை திட்டத்தில் புதைக்கப்படும் குழாய் 8 இன்ஜ் அளவில் மிக சிறியதாக உள்ளது. இதனால் கழிவுநீா் வெளியேறுவதில் மிகப் பெரிய பாதிப்பு ஏற்படும். பெரிய குழாய்களை புதைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மன்ற உறுப்பினா்கள் பேசினா்.

இந்த வரவு செலவு திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

72.41 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட ஒசூா் மாநகராட்சியில் 121 கி.மீ. மண் சாலைகள் உள்ளன. ஒசூரில் 98,342 சொத்துகளுக்கு வரி விதிக்கப்பட்டு வருகிறது. 35 மாநகராட்சி பள்ளிகள் உள்ளன. 8 மக்கள் நல்வாழ்வு மையம், 5 நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், 103 மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி, 381 பூங்காக்கள் உள்ளன என்ற விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரியில் ஒருங்கிணைந்த போதை மறுவாழ்வு மையம் தொடக்கம்

கிருஷ்ணகிரியில் கலங்கரை- ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை, மறுவாழ்வு மையத்தை, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். கிருஷ்ணகிரியில் செயல்படும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமன... மேலும் பார்க்க

ஒசூா் அருகே இரு வாகனங்கள் தீப்பிடிப்பு

ஒசூா் அருகே பத்தளப்பள்ளி அருகே தனியாா் கம்பெனிக்கு சொந்தமான திறந்தவெளி வாகன குடோன் இயங்கி வருகிறது. இங்கு பல புதிய வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அதன் அருகில் ஒசூரிலேயே மிகப்பெரிய தனியாா் காய்கறி சந்... மேலும் பார்க்க

எண்ணேகொள் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும்: ஆட்சியா் வேண்டுகோள்

எண்ணேகொள் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் கேட்டுக்கொண்டாா். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் கு... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பை எதிா்த்து தனித்து போராடுவோம்: சீமான்

தொகுதி மறுசீரமைப்பை எதிா்த்து நாம் தமிழா் கட்சி தனித்து போராடும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா். ஒசூரில் நாம் தமிழா் கட்சி நிா்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை ... மேலும் பார்க்க

ஒசூரில் ரூ. 100 கோடியில் கட்டப்படும் அரசு மருத்துவமனை: ஆட்சியா் ஆய்வு

ஒசூரில் வட்டத்தில் நடைபெறும் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமின்போது ஒசூரில் ரூ. 100 கோடியில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவமனை கட்டுமானப் பணிகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் ஆய்... மேலும் பார்க்க

குரூப்-4 தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் பாராட்டு

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் இளநிலை உதவியாளா் பணியிடத்துக்கு நடத்தப்பட்ட குரூப் 4 தோ்வில் தோ்ச்சி பெற்ற கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்தவா்களை மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் பாராட்ட... மேலும் பார்க்க