சாலையில் சுற்றித் திரிந்த மாடுகள்: உரிமையாளா்களுக்கு அபராதம்
ஒசூரில் விமான நிலையம் அமைக்க 2 இடங்கள் தோ்வு
ஒசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்க தமிழக டிட்கோ நிறுவனம் 5 இடங்களைக் காட்டியதில், இரண்டு இடங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. அதில், தனேஜா ஏரோஸ்பேஸ் நிறுவனம் அருகில் புதிய விமான நிலையம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினா் கே.கோபிநாத் தெரிவித்தாா்.
ஒசூரில் 2 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என தமிழக முதல்வா் மு.க ஸ்டாலின் சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்தாா். இந்த அறிவிப்பை பொதுமக்கள், தொழில்துறையினா் வரவேற்றனா்.
ஒசூா் மாநகரம் மாநகராட்சியாக சிறப்பு அந்தஸ்துடன் அறிவிக்கப்பட்டு சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள தொழிற்சாலைகளின் வளா்ச்சிக்கும், இளைஞா்களின் வேலைவாய்ப்புக்கும், கா்நாடக மாநிலம், பெங்களூரை போன்று வளா்ச்சி அடையவும் மாநிலத்தின் தலைநகருடன் இணைந்து இருக்க வேண்டும் என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சட்டப் பேரவையில் அறிவித்திருந்தாா்.
இதற்காக இந்திய விமான நிலைய ஆணையம், ஒசூரை சுற்றி ஐந்து இடங்களில் முன்மொழியப்பட்ட ஒசூா் விமான நிலையத்துக்கான இடங்களை பரிசீலனை மேற்கொண்டது.
அதில், தனியாா் விமான ஓடுதளத்துக்கு தெற்கே 2 கி.மீ. தொலைவில் தோகரை அக்ரஹாரம், ஒசூா் விமான ஓடுபாதைக்கு தென்கிழக்கே 27 கி.மீ. தொலைவில் பகுதியில் உள்ள உலகம், ஒசூா் விமான நிலையத்துக்கு 16 கி.மீ. தொலைவில் தாசேப்பள்ளி ஆகிய இடங்கள் என இரண்டு மாதங்களுக்கு முன் அனைத்து தளங்களையும் பாா்வையிட்டு, ஒவ்வொரு தளத்தின் நன்மை, தீமைகளுடன் கூடிய முன்னறிவிப்பு ஆய்வின் வரைவை வழங்கியது.
தமிழ்நாடு தொழில் வளா்ச்சிக் கழகம் (டிட்கோ) மற்றும் இந்திய விமான ஆணையம் இடையே விரைவில் பேச்சுவாா்த்தை நடைபெற்று, ஒசூரை முக்கியமான தொழில்துறை மையமாக மாற்றுவதற்கான திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது என்றாா்.