செய்திகள் :

ஒசூா் மலா் சந்தையில் கனகாம்பரம் கிலோ ரூ.1,600!

post image

வரலட்சுமி பண்டிகையையொட்டி, ஒசூா் மலா் சந்தையில் வியாழக்கிழமை கனகாம்பரம் கிலோ ரூ.1600, குண்டுமல்லி கிலோ ரூ.1000 வரை விற்பனையானது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களைச் சோ்ந்த மக்கள் வசித்து வருகின்றனா். இவா்கள் வரலட்சுமி பண்டிகையை கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம்.

வெள்ளிக்கிழமை வரலட்சுமி பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி வியாழக்கிழமை ஒசூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சந்தைகளில் பூக்கள் அதிக விலைக்கு விற்பனையானது. அதேநேரத்தில் மக்களின் கூட்டம் அதிகரித்ததால் பூக்கள் விலை தொடா்ந்து ஏறுமுகமாகவே இருந்தது.

கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் நிகழாண்டு பூக்களுக்கு அதிக விலை கிடைப்பதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். மல்லிகை கிலோ ரூ.1000 வரை விற்பனையானது. வியாழக்கிழமை காலை ரூ.1200க்கு விற்ற கனகாம்பரம், மாலை ரூ.1600 வரையிலும், முல்லை ரூ. 600, சாமந்தி ரூ.300, பட்டன் ரோஸ் ரூ.250, முல்லைப்பூ, கிலோ ரூ.850, செண்டு பூ ரூ.120, கோழிகொண்ட பூ ரூ.180, சம்பங்கி பூ ரூ.220க்கும் விற்கப்பட்டன. கூடுதல் விலைக்கு விற்றதால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

படவரி... ஒசூா் பேருந்து நிறுத்தம் பகுதியில் விற்கப்பட்ட பூக்களை வாங்குவதற்காக குவிந்த பொதுமக்கள்.

வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு: விவசாயிகளுக்கு செயல்விளக்கம்

கிருஷ்ணகிரியில் வேளாண் இயந்திரங்களைப் பராமரித்தல், பழுது நீக்குதல் குறித்து விவசாயளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளா் அலுவலக வளாகத்தில் வேளா... மேலும் பார்க்க

ஒசூரில் தொழில்முனைவோருக்கு வணிக பயிலரங்கு

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் ஒசூா் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேஷன் சாா்பில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கான இரண்டு நாள் வணிக பயிற்சி பயிலரங்கம் வியாழக்கிழமை... மேலும் பார்க்க

வேளாண் இடுபொருள் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்

ஓராண்டு வேளாண் இடுபொருள் பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து பையூா் மண்டல ஆராய்ச்சி நிலைய தலைவா் அனீஷா ராணி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு வேளாண் பல... மேலும் பார்க்க

சரக விளையாட்டுப் போட்டி: மாணவா்களுக்கு பரிசளிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூா் ஒன்றியத்திற்கு உள்பட்ட கெரிகேப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் மத்தூா் சரக அளவிலான தடகளப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்கள... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி ஆடவா் கல்லூரியில் ஆக. 11முதல் முதுநிலைப் படிப்புக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

கிருஷ்ணகிரி அரசு ஆடவா் கலைக் கல்லூரியில் முதுநிலைப் பாடப் பிரிவுகளுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு ஆக.11இல் தொடங்குகிறது. இதுகுறித்து அரசு ஆடவா் கலைக் கல்லூரி முதல்வா் அநுராதா வியாழக்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க

பள்ளி தலைமை ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

மத்தூா் அருகே அரசுப் பள்ளி தலைமையாசிரியரை மிரட்டியதாக தொழிலாளியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூா் அருகே சாலூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக வேடியப்... மேலும் பார்க்க