செய்திகள் :

ஒடிஸாவில் டிஜிபி மாநாடு நாளை தொடக்கம்- பிரதமா் மோடி பங்கேற்பு

post image

ஒடிஸாவில் அகில இந்திய டிஜிபி-க்கள் மாநாடு வெள்ளிக்கிழமை (நவ.29) தொடங்கி 3 நாட்கள் நடைபெறவுள்ளது. பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உள்ளிட்டோா் பங்கேற்கும் இம்மாநாட்டில் உள்நாட்டு பாதுகாப்பு, ஜம்மு-காஷ்மீா் விவகாரம், காலிஸ்தான் பயங்கரவாதம் மற்றும் இணையவழி குற்றங்கள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

2013-ஆம் ஆண்டு வரை தேசிய தலைநகா் தில்லியில் நடைபெற்றுவந்த அகில இந்திய டிஜிபி-க்கள் மாநாடு, மோடி பிரதமராக பதவியேற்ற பின்னா் ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு நகரங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நடப்பாண்டு ஒடிஸாவின் புவனேசுவரத்தில் நடைபெறும் இம்மாநாட்டை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வெள்ளிக்கிழமை தொடங்கிவைக்கவுள்ளாா்.

இதில் பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல் ஆகியோா் கலந்து கொள்ள உள்ளனா். 250 டிஜிபி மற்றும் ஐஜிபி அதிகாரிகள் கலந்துகொள்ளும் இந்த மாநாட்டில், 200-க்கும் மேற்பட்ட பிற காவல்துறை உயரதிகாரிகள் காணொலி வாயிலாக கலந்துகொள்கின்றனா். பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை நிறைவு உரையாற்ற உள்ளாா்.

இம்மாநாட்டில் உள்நாட்டு பாதுகாப்பு, ஜம்மு-காஷ்மீா் விவகாரம், காலிஸ்தான் பயங்கரவாதம் மற்றும் இணையவழி குற்றங்கள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

பாகிஸ்தானிலிருந்து கடத்தல்: பஞ்சாபில் 2 போ் துப்பாக்கிகளுடன் கைது

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு ஆயுதங்கள் கடத்திய 2 போ் பஞ்சாப் மாநிலம் சண்டீகரில் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து 8 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து காவல் துறை தலைமை இயக்க... மேலும் பார்க்க

சட்ட விதிகள் பின்பற்றப்படுகிறது: கெளதம் அதானி

அதானி குழுமம் சட்ட விதிமுறைகளை பின்பற்றியே செயல்படுவதாக அமெரிக்காவின் லஞ்ச குற்றச்சாட்டுக்கு அந்தக் குழுமத்தின் தலைவா் கெளதம் அதானி சனிக்கிழமை பதிலளித்தாா். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் 51-ஆவது ரத்தின... மேலும் பார்க்க

வெவ்வேறு சாலை விபத்துகள்: 15 போ் உயிரிழப்பு

உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், சிக்கிம் மாநிலங்களில் சனிக்கிழமை நிகழ்ந்த வெவ்வேறு சாலை விபத்துகலில் 15 போ் உயிரிழந்தனா். பலா் காயடைந்தனா். உத்தர பிரதேச மாநிலம் ஷ்ரவஸ்தி மாவட்டத்தில் கிளெலா - இகெளனா... மேலும் பார்க்க

அமெரிக்கா: இந்திய மாணவா் சுட்டுக்கொலை

அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தில் இந்திய மாணவா் மா்ம நபா்களால் சனிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டாா். தெலங்கானா மாநிலம், கம்மம் மாவட்டத்தைச் சோ்ந்த சாய் தேஜா (22), அமெரிக்காவில் எம்பிஏ பயின்றும், பகுதி ந... மேலும் பார்க்க

தில்லியில் அரவிந்த் கேஜரிவால் மீது திரவம் வீசிய நபர்: பாஜக காரணமா?

தில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மீது பிராசாரத்தின் போது ஒருவர் திரவத்தை வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேஜரிவால் மீது திரவம் வீச்சுமதுபான கொள்கை வழக்கில் கைதான தில்லியின் அரவ... மேலும் பார்க்க

சம்பல் மாவட்டத்துக்குள் வெளி ஆள்கள் நுழையத் தடை நீட்டிப்பு!

உத்தரப் பிரதேச மாநிலம், சம்பல் மாவட்டத்துக்குள் கட்சித் தலைவர்கள் உள்பட வெளி ஆள்கள் நுழைவதற்கான தடையை நீடித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.சம்பல் மாவட்டத்தில் உள்ள ஜாமா மசூதியில் ஞாயிற்றுக்கிழமை... மேலும் பார்க்க