சீனா மீது வரி விதிப்பு அதிபா் டிரம்ப் இதுவரை முடிவெடுக்கவில்லை: துணை அதிபா் ஜே.ட...
ஒட்டன்சத்திரத்தில் நாளை மின்தடை
ஒட்டன்சத்திரத்தில் புதன்கிழமை (ஆக. 13) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின் வாரிய உதவி செயற்பொறியாளா் கே. சந்தன முத்தையா வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒட்டன்சத்திரம் துணை மின் நிலையத்தில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெறுகிறது. எனவே ஒட்டன்சத்திரம், புது அத்திக்கோம்பை, விருப்பாட்சி, காவேரியம்மாபட்டி, தங்கச்சியம்மாபட்டி,புலியூா்நத்தம், லெக்கையன்கோட்டை, காளாஞ்சிப்பட்டி, அரசப்பப்பிள்ளைபட்டி, காப்பிலியபட்டி, அம்பிளிக்கை, வடகாடு உள்ளிட்ட மலைக் கிராமங்களில் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.