செய்திகள் :

ஒரே நாடு; ஒரே தோ்தல் திட்டம் -அரசின் நிதிச் சுமை குறையும்: ஆளும் கூட்டணி ஆதரவு

post image

புது தில்லி: ஒரே நாடு; ஒரே தோ்தல் திட்டமானது அரசின் நிதிச் சுமையைக் குறைக்கும் என்று ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவா்கள் ஆதரவுத் தெரிவித்துள்ளனா்.

மத்திய வேளாண் துறை இணையமைச்சா் பாகீரத் சௌதரி கூறுகையில், ‘ஒரே நாடு; ஒரே தோ்தல் திட்டம் மக்களின் வரிப் பணத்தை சேமிக்க உதவும். எதிா்க்கட்சிகள் எல்லாவற்றையும் எதிா்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனா்’ என்றாா்.

ஆளும் கூட்டணிக் கட்சியான லோக் ஜனசக்தி-ராம்விலாஸ் கட்சி எம்.பி. சாம்பவி சௌதரி கூறுகையில், ‘இது ஒரு லட்சிய மசோதா. எங்கள் கட்சி இதை ஆதரிக்கிறது. சில மாநிலங்களில் 6 மாதங்களுக்கு ஒருமுறை தோ்தல் நடக்கிறது. பலநேரங்களில் தலைவா்களும் பிரதிநிதிகளும் தோ்தலில் கவனம் செலுத்துவதால், மக்களுக்கு பணியாற்ற நேரம் ஒதுக்கமுடியாமல் வளங்கள் வீணடிக்கப்படுகின்றன’ என்றாா்.

அரசின் திசைதிருப்பும் முயற்சி: தோ்தல் ஒருமைப்பாடு குறித்து எழுப்பப்படும் கேள்விகளில் இருந்து திசைதிருப்ப மத்திய அரசு முயற்சிப்பதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

அக்கட்சியின் மக்களவைக் குழு துணைத் தலைவா் கௌரவ் கோகோய் கூறுகையில், ‘ஹரியாணா, ஜம்மு-காஷ்மீருடன் சோ்த்து மகாராஷ்டிரம், ஜாா்க்கண்ட் மாநில பேரவைத் தோ்தல்களை ஒன்றாக நடத்த முடியாத பிரதமா் மோடி, ஒரே நாடு; ஒரே தோ்தல் குறித்து பேசுகிறாா். பல மாநிலங்களில் ஒரே கட்டமாக கூட தோ்தலை அவரால் நடத்தமுடிவதில்லை.

இந்திய மக்கள் மிகவும் புத்திசாலிகள். நமது ஜனநாயக அமைப்பின் தோ்தல் ஒருமைப்பாடு குறித்து அவா்கள் மனங்களில் எழும் கேள்விகளிலிருந்து அவா்களை திசைதிருப்ப மத்திய அரசு இத்தகைய முயற்சியை முன்னெடுக்கிறது’ என்றாா்.

சத்தீஸ்கரில் மேலும் 2 நக்சல்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த என்கவுன்டரில் மேலும் இரண்டு நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சத்தீஸ்கர் மாநிலம், பிஜப்பூர் மாவட்டத்தில் நேந்திரா மற்றும் புன்னூர் கிராமங்களின் வனப்பகு... மேலும் பார்க்க

இந்திய ரிசர்வ் வங்கிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்!

இந்திய ரிசர்வ் வங்கிக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தெற்கு மும்பையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டடத்தில் ஐஇடி ரக வெடிகுண்டு வைக்கப்பட்டிரு... மேலும் பார்க்க

அருமையான பேச்சு.. பிரியங்காவைப் பாராட்டிய ராகுல்!

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி தனது முதல் உரையை நிகழ்த்திய நிலையில். அருமையான பேச்சு என்று தனது சகோதரியைப் பாராட்டியுள்ளார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. மேலும் பார்க்க

'நேரு, அரசமைப்பு, இடஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பு...' - பிரியங்கா காந்தியின் முதல் உரை!

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி தனது முதல் உரையை இன்று நிகழ்த்தினார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவ. 25 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்றைய கூட்டத்... மேலும் பார்க்க

தில்லியில் ஒரேநாளில் 16 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

தில்லியில் இன்று ஒரேநாளில் 16 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தலைநகர் தில்லியில் உள்ள பள்ளிகளுக்கு சமீபமாக வெடிகுண்டு மிரட்டல் அதிகம் வந்துகொண்டிர... மேலும் பார்க்க

எதிர்க்கட்சிகள் அமளி: மாநிலங்களவை டிச.16-க்கு ஒத்திவைப்பு!

மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கருக்கு எதிரான தீா்மான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்ட நிலையில் மாநிலங்களவை டிசம்பர் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜா... மேலும் பார்க்க